அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
புதுடெல்லி, அக்-19
இந்திய தலைநகர் புது டெல்லியில், அமீரக அரசின் தூதரக சேவைகள் மற்றும் விசா விண்ணப்பங்களை பரிசீலித்து அங்கேயே விசா வழங்கவும் புதிய மையம் ஒன்றை திறந்துள்ளது. அமீரகத்திற்கு வெளியே பிற வெளிநாடுகளில் திறக்கப்பட்டு 6 வது விசா மையமாக இது அமைந்துள்ளது.

இந்த மையங்களில் வழங்கப்படும் விசாவை கொண்டு எத்தகைய தாமதமுமில்லாமல் விமான நிலைய ஈ-கேட்கள் (e-Gates) வழியாக அமீரகத்திற்குள் பிரவேசிக்கலாம். இந்த மையத்தில் வேலைவாய்ப்பு விசாவிற்காக விண்ணப்பிப்பவர்கள் தங்களுடைய அசல் பாஸ்போர்ட், கண் மற்றும் முகத்தை ஸ்கேன் செய்வதுடன் மருத்துவ சோதனை சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும். மருத்துவ சோதனைகள் செய்ய டெல்லியில் செயல்படும் 10 மருத்துவ மனைகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வேலைவாய்ப்புகளுக்காக ஏஜென்டுகளுக்கு கட்டும் பணம் சேமிக்கப்படுவதுடன் அமீரகத்திற்குள் நுழைந்த பின் ஆவணங்களில் காணப்படும் குறைகளுக்காக தடுப்பு காவல் மற்றும் சொந்த நாட்டிற்கு திருப்பியனுப்புதல் போன்ற சம்பவங்கள் நிகழ்வது தடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Emirates 247
தமிழில்: 
அதிரை நியூஸ்,நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-