அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 


துபாய், அக்-18
அமீரகத்திற்கான இந்திய தூதர் T.P. சீதாராமன் அவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற்றதை தொடர்ந்து புதிய தூதராக தற்போது ஆஸ்திரேலியாவில் இந்திய ஹை கமிஷனராக பணிபுரியும் நவ்தீப் சிங் சூரி நியமிக்கப்பட்டுள்ளதாக அமீரக தூதரக அதிகாரி நீதா பூஷன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இன்னும் சில வாரங்களில் தூதராக பொறுப்பேற்கவுள்ள நவ்தீப் சிங் சூரி 1983 ஆம் ஆண்டு முதல் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியாக கெய்ரோ (எகிப்து), டமாஸ்கஸ் (சிரியா), வாஷிங்டன் (அமெரிக்கா), தாருஸ் ஸலாம் (புருணை), லண்டன் (இங்கிலாந்து) ஆகிய இடங்களிலும் கவுன்சல் ஜெனரலாக ஜோஹன்னஸ் பர்க்கிலும் (தென் ஆப்பிரிக்கா), இந்திய தூதராக எகிப்திலும் பணியாற்றியுள்ளார்.

பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ள சூரி அரபி மற்றும் பிரேஞ்ச் மொழிகளையும் பயின்றுள்ளார். மேலும் வெளியுறவு துறையில் சமூக ஊடக பயன்பாட்டை அறிமுகப்படுத்தியதற்காக 2 விருதுகளையும் பெற்றுள்ளார்.

Source: Gulf News
தமிழில்: 
அதிரை நியூஸ்:நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-