அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
இணையத்தளம் மூலம் பணம் திருடுபோகாமல் இருக்க வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள், முகநூலில் இருக்கும், பெயர் மற்றும் பிறந்த தேதிகளை அகற்றினாலே போதும் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஆன்லைன் மூலம் பிரபல வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டு வந்தது.

இதையடுத்து அனைத்து வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏ.டி.எம் மற்றும் இண்டர்நெட் பேங்க் கடவுச்சொற்களை மாற்றி கொள்ளும்படி எச்சரித்து, மெசேஜ் அனுப்பியது. இந்த மெசேஜ் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் செல்போன் மூலம் சென்றடைந்தது. அதை பார்த்த பலர் தங்கள் கடவுச்சொற்களை மாற்றியுள்ளனர். ஏனென்றால் வங்கியில் இருந்து கொடுக்கும் கடவுச்சொற்களை சிலர் மாற்றாமல் பயன்படுத்தி வருவார்கள்.

இதை தெரிந்து கொண்டுள்ள ஹேக்கர் என்னும் ஆன்லைன் திருடர்கள், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளை முடக்கி, அதில் இருந்து பணத்தை எடுத்து கொள்கின்றனர். இதற்கு வங்கி நிர்வாகம் பொறுப்பு என்றாலும், கவனகுறைவாக இருக்கும் வாடிக்கையாளர்கள் மீதும் குற்றம் உள்ளது. தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்து வந்த இந்த காலக்கட்டங்களில், அனைவரும் ஆன்லைன் வர்த்தகத்தை விரும்புகின்றனர்.
பணம் எடுப்பதற்கும், செலுத்துவதற்கும் ஆன்லைனையே பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு பயன்படுத்தும்போது, சைபர் குற்றவாளிகள், உங்கள் வங்கி கணக்குகள் விவரங்களை சாதுரியமாக ஹேக் செய்துவிடுகின்றனர். சமீபத்தில் சைபர் கிரைம் போலீசார் எடுத்த ஆய்வில், 75 சதவீதம் சைபர் குற்றவாளிகள், படித்த இளைஞர்களாகவே இருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. ஏனென்றால் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி, எப்படி புரோகிராம் செய்வது, எந்த இணையதளத்தை எப்படி முடக்கலாம். அதற்காக புரோகிராம் கோர்டிங் என்னவென்பது, படித்த இளைஞர்களுக்கு தெரிந்திருக்கும்.

அவர்கள் தங்கள் மூளையை செலவு செய்து, புரோகிராமை தயாரித்து, வங்கி இணையதளங்களை முடக்கிவிடுகின்றனர். அதில் இருந்து வாடிக்கையாளர்களின் விவரங்களை பெற்று கொண்டு, சர்வசாதாரணமாக பணத்தை திருடி கொள்கின்றனர். இது தவிர மற்றொரு வழிகளையும் சைபர் குற்றவாளிகள் பயன்படுத்துகின்றனர். அவை வேறுவொன்றும் இல்லை. சமூக வலைத்தளங்களில் நீங்கள் பதிவு செய்யும், உங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி, செல்போன் எண்கள்தான். உங்கள் முகநூல் கணக்கை ஹேக் செய்யும் சைபர் குற்றவாளிகள் அதில் இருந்து, பிறந்த தேதி, செல்போன் நம்பர், பெயரை திருடி கொள்கின்றனர்.

அதை வைத்து போலியான பான் கார்டு மற்றும் சிம்கார்டு பெற்று, ஆன்லைன் வங்கி கணக்குகளை முடக்கி விடுகின்றனர். கடவுள் சொற்கள் ரகசியமானதாக இருந்தாலும் சைபர் குற்றவாளிகள் கடவுச் சொற்கள் மறந்துவிட்டதாக கூறி, புதிய கடவுச் சொற்களை பதிவு செய்கின்றனர். வங்கிகள் அதை தெரியாமல், உங்கள் செல்போன் நம்பருக்கு புதிய கடவுச்சொற்களை அனுப்பி வைப்பார்கள். ஆனால் முன்னதாக சைபர் குற்றவாளிகள் உங்கள் சிம்கார்டுகளை செயலிழக்க செய்திருப்பதால், அவர்கள் பயன்படுத்தும், புதிய சிம்கார்டுக்கு மெசேஜ் பரிமாற்றம் செய்யப்படும். அதை பயன்படுத்தி எளிதாக, சைபர் குற்றவாளிகள் அவர்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்து கொள்கின்றனர்.

எனவே வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தளங்களில் உங்கள் தினசரி பயன்பாட்டில் இருக்கும் செல்போன் நம்பர் மற்றும் பிறந்த நாள் தேதிகளை பதிவு செய்வதை தவிர்த்து கொள்ளுங்கள். சைபர் கிரைம் போலீசாரும் புகார் அளிக்க வருபவர்கள் மற்றும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு இதே தகவலை கொடுத்து வருகின்றனர். இது குறித்து சைபர் டாக்ஸ் போர்சை சேர்ந்த (சைபர் கிரைம் போலீஸ்) ரோகன் என்பவர் கூறியதாவது;

சைபர் குற்றவாளிகள் முதலில் உங்கள் முகநூலில் இருக்கும் பெயர் மற்றும் பிறந்த தேதியை திருடுவார்கள். பின்னர் அதை வருமான வரித்துறை வலைத்தளத்தில் சென்று பதிவு செய்வார்கள். அதன் மூலம் உங்கள் பான்கார்டு மற்றும் செல்போன் நம்பரை பெற்று கொள்வார்கள். அதை வைத்து போலி பான் கார்டு பெறுவார்கள். பின்னர் செல்போன் திருடுபோனதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பார்கள். காவல் நிலையத்தில் ஒரு எப்.ஐ.ஆரை பெற்று, புதிய சிம்கார்டுகளை உங்கள் செல்போன் நம்பரில் பெறுவார்கள். அதை வைத்து உங்கள் ஆன்லைன் வங்கி கணக்கை திறப்பார்கள்.

கடவுச் சொற்கள் பதிவு செய்யவேண்டிய இடங்களில், அதை மறுந்துவிட்டதாக கூறுவார்கள். அதை வங்கிகள் ஏற்று கொண்டு, புதிய கடவுச்சொற்களை புதிதாக வாங்கப்பட்ட போலி சிம்கார்டு எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும். அதை பயன்படுத்தி உங்கள் ஆன்லைன் வங்கி கணக்கிற்குள் சென்று, பணத்தை எடுத்து கொள்வார்கள். இப்படிதான் சமீபத்தில் பதிவான சைபர் குற்றங்கள் அனைத்தும் நடந்துள்ளது. எனவே பொதுமக்கள் உஷராக இருக்கவேண்டும். உடனே உங்கள் முகநூலில் இருக்கும் பிறந்த தேதி, முகவரி மற்றும் செல்போன் நம்பரை அகற்றுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

* பணம் எடுப்பதற்கும், செலுத்துவதற்கும் ஆன்லைனையே பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பயன்படுத்தும்போது, சைபர் குற்றவாளிகள், உங்கள் வங்கி கணக்குகள் விவரங்களை சாதுரியமாக ஹேக் செய்துவிடுகின்றனர். சமீபத்தில் சைபர் கிரைம் போலீசார் எடுத்த ஆய்வில், 75 சதவீதம் சைபர் குற்றவாளிகள், படித்த இளைஞர்களாகவே இருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.

* மற்றொரு வழிகளையும் சைபர் குற்றவாளிகள் பயன்படுத்துகின்றனர். அவை வேறுவொன்றும் இல்லை. சமூக வலைத்தளங்களில் நீங்கள் பதிவு செய்யும், உங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி, செல்போன் எண்கள்தான். உங்கள் முகநூல் கணக்கை ஹேக் செய்யும் சைபர் குற்றவாளிகள் அதில் இருந்து, பிறந்த தேதி, செல்போன் நம்பர், பெயரை திருடி கொள்கின்றனர். அதை வைத்து போலியான பான் கார்டு மற்றும் சிம்கார்டு பெற்று, ஆன்லைன் வங்கி கணக்குகளை முடக்கி விடுகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-