அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஜித்தா (31 அக் 2016); உம்ரா யாத்திரை கட்டணம் உயர்த்தப்பட்டதை அடுத்து இந்தியாவிலிருந்து மக்காவிற்கு உம்ரா பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சவூதி அரேபியா மக்காவிற்கு உம்ரா பயணம் மேற்கொள்பவர்கள் முதல் தடவை என்றால் கட்டணம் இல்லை. அதேவேளை ஒன்றுக்கு மேல் உம்ரா யாத்திரை மேற்கொள்பவர்கள் 15 நாட்கள் உம்ரா விசாவிற்கு 2000 சவூதி ரியால் கட்டணமாக செலுத்த வேண்டும்.

இந்த புதிய விதிமுறை கடந்த மாதம் அமுலுக்கு வந்தது. தற்போது உம்ரா சீசன் தொடங்கியுள்ள நிலையில் புதிய விதிமுறையின்படி கட்டணம் இரட்டிப்பாகியுள்ளதால் இந்தியாவிலிருந்து உம்ரா பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ட்ராவல் ஏஜென்ஸி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

முதல்தடவை உம்ரா பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த புதிய கட்டண முறை பின்பற்றப் பட மாட்டாது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-