அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


நாடு முழுவதும் ஏடிஎம்களை மையமாக வைத்து நடக்கிற கொள்ளை சம்பவங்கள் ஏடிஎம்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்க தொடங்கியுள்ளன. இந்த நிலையில் நாடு முழுவதும் 32 லட்சம் ஏடிஎம் டெபிட் கார்டுகள் பாதுகாப்பு இல்லாதவை என்று பாங்க் சில்லறை வணிகத்தை மேற்பார்வையிடுகின்ற நேஷனல் பேமன்ட் கார்பரேஷன் (என்பிசிஐ) அறிவித்துள்ளது. இந்த கார்டுகளை பாங்குகள் செயல்படாமல் செய்யவோ அல்லது திரும்ப பெறவோ செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக வங்கிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கேட்கவும் செய்துள்ளது.

வங்கிகளின் சர்வர்களுடன் தொடர்பு கொண்டு முறைகேடுகளை கண்டறிய பாரன்சிக் தணிக்கை மேற்கொள்ள என்பிசிஐ உத்தரவிட்டுள்ளது. இதுவரை 19 வங்கிகளில் ஏடிஎம் முறைகேடுகள் நடந்தது கண்டறியப்பட்டுள்ளது. கார்டு உரிமையாளர்கள் இந்தியாவில் இருக்கும்போதே சீனாவில் இருந்தும், அமெரிக்காவில் இருந்தும் பணம் எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் 641 பேரின் பணம் இவ்வாறு எடுக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள ஏடிஎம் கார்டுகளில் 99.5 சதவீதம் கார்டுகள் பாதுகாப்பானவையாகவே இருக்கின்றன. 32 லட்சம் ஏடிஎம் கார்டுகள் பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளன என தெரியவந்துள்ளது. இதுவரையுள்ள கணக்குகள் அடிப்படையில் ரூ.1.3 கோடி மதிப்புள்ள பணம் ஏடிஎம்களில் இருந்து கார்டுகள் வழியாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குழுமம் 6 லட்சம் ஏடிஎம் கார்டுகளை முடக்கியுள்ளது. புதிய தலைமுறைக்கான 4 தனியார் வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களின் 26 லட்சம் ஏடிஎம் கார்டுகள் பாதுகாப்பு இல்லை என்று கண்டறிந்துள்ளது. புதிய கார்டுகளை சொந்தமாகவோ அல்லது கார்டில் உள்ள பின் நம்பரை மாற்றவோ செய்துகொள்ள வேண்டும் என்று வங்கிகள் தங்கள் வாடிக்கையாளரை கேட்டுள்ளன. குமரி மாவட்டம் உட்பட தமிழகத்திலும் வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களில் உடனே உங்களது ஏடிஎம் கார்டு பின் நம்பரை மாற்றிக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தல்கள் வந்தவண்ணம் உள்ளன.
இதற்கிடையே பாதுகாப்பு குறைபாடு குறித்த ஆய்வில் வங்கிகளின் சில ஏடிஎம்களே இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

இந்த வங்கிகளில் உபயோகப்படுத்தப்பட்ட பிற பாங்குகளின் ஏடிஎம்கார்டுகளில் இருந்து விபரங்கள் சேகரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. விலை குறைவாக இருக்கும் என்று கருதி வாங்கப்பட்ட ஒரு கம்பெனியின் ஏடிஎம்கள் இத்தகைய குழப்பங்களுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதுபோன்ற சைபர் கிரைம்கள் வாயிலாக நாடு முழுவதும் 1 லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அசோசியேட்ஸ் சேர்மபர்ஸ் ஆப் காமர்ஸ் அன்ட் இன்டஸ்டரியும் (அசோசெம்) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நாகர்கோவிலிலும் அண்மையில் இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன.

தப்பிக்க என்ன வழி?

* ஏடிஎம் கொள்ளையில் இருந்து தப்பிக்க இருக்கின்ற ஒரே வழி இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை எடிஎம் கார்டுகளின் பின் எண்ணை மாற்ற வேண்டும் என்றே வங்கிகள் அறிவுறுத்துகின்றன. பெருமளவு தொகை சேமிக்கின்றவர்கள், அடிக்கடி பயணத்தில் இருப்பவர்கள் இதனை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
* கார்டுகளை தற்காலிகமாக பிளாக் செய்வதற்கு பல வங்கிகளும் மொபைல் ‘ஆப்’கள் தயார் செய்து கொடுத்துள்ளன. இதன் வழியாக எடுக்க வேண்டிய ெதாகையின் அளவை நிர்ணயம் செய்யவோ, கார்டை நாமே தற்காலிகமாக முடக்கவோ செய்யலாம்.
* நாட்டின் உள் பகுதியில் இருந்து மட்டும் பணம் எடுக்கும் வகையில் கார்டின் வரையறையை நிர்ணயம் செய்துகொண்டால் வெளிநாட்டில் இருந்து பணம் எடுக்கும் முறைகேடுகளில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம். இதற்காக எஸ்பிஐயில் ‘எஸ்பிஐ குவிக்’ என்ற அப்ளிகேஷன் இந்த பயன்பாட்டில் உள்ளது.
* எஸ்எம்எஸ் வழியாகவோ, கால் சென்டரில் இருந்து அழைத்தோ ஏடிஎம் கார்டை நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ முடக்க வசதியை எல்லா வங்கிகளும் ஏற்படுத்தியுள்ளன. இதற்காக உள்ள டோல் ப்ரீ எண்களும், எஸ்எம்எஸ் பார்மேட்களும் போனில் பதிவு செய்து பாதுகாப்பது நல்லது. வங்கி கிளைகளில் பதிவு செய்துள்ள போன் எண்களில் இருந்து மட்டுமே இதனை செயல்படுத்த முடியும்.
* ஓட்டல்கள், வியாபார இடங்களில் கார்டு வழியாக பணம் கொடுக்கும்போது பின் எண் பதிவு செய்யும்போது மற்றவர்கள் கவனிக்க தக்க விதத்தில் நடந்துகொள்ள வேண்டாம். ரெஸ்டாரண்டுகளில் வெயிட்டர்களிடம் கார்டு கொடுத்து பின் நம்பர் சொல்லி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
* எந்த வங்கிகளும் போன் மூலமாக உங்களின் ஏடிஎம் கார்டு விபரங்களை கேட்பது இல்லை. எனவே அதுபோன்று யார் எடிஎம் கார்டு எண் விபரங்களை கேட்டாலும் பதில் அளிக்க வேண்டாம்.
* பொருட்கள் விற்பனை செய்கின்ற இ-காமர்ஸ் வெப்சைட்டுகள் பாதுகாப்பானதுதான் என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். முன்பின் கேள்விப்படாத வெப்சைட்களில் இருந்து பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. இன்டர்நெட் கபே, முன்பின் அறிமுகம் இல்லாதவர்களின் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றின் மூலம் ஆன்லைனில் பொருட்கள் வாங்கவோ, பணம் செலுத்தவோ வேண்டாம்.
* மிக குறைந்த விலையில் மொபைல் போன் போன்ற எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என்ற அறிவிப்புகள் இ-மெயில், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்றவற்றில் அறிவிப்புகளை லிங்க் வழங்கி அதன் மூலம் விபரங்களை திருடுதல் அதிகரித்துள்ளது. அதுபோன்ற லிங்குகளில் கிளிக் செய்து பொருட்கள் வாங்குவதை தவிர்த்து நேரடியாக வெப்சைட் முகவரியில் சென்று பார்த்து சலுகை என்பது உண்மையா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-