அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


மும்பை: தீபாவளி மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் இந்தியர்களின் சுற்றுலா தலங்கள் குறித்த தேடுதல் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது துபாய் ஆகும். அடுத்தபடியாக உள்நாட்டில் கோவா செல்வதற்காக அதிகம் பேர் அதுகுறித்த விவரங்களை சேகரித்துள்ளனர். விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வது என்பது தற்போதை காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள், நண்பர்கள், குடும்பத்தினருடன் செல்வது என அனைத்து தரப்பினரும் தற்போது விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வது என்பது சாதாரண ஒன்றாகிவிட்டது. பரபரப்பான வாழ்க்கை சூழலில் ஏராளமானோர் பணிச்சுமை காரணமாக மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு மாற்று மருந்தாக சுற்றுலா செல்வதை அனைவரும் பெரிதும் விரும்புகின்றனர். குடும்பத்தினருடன் வெளியூர்களுக்கு சென்று புதிய சூழலில் ஓரிரு நாட்கள் கழித்துவிட்டு வருவதை அனைவரும் விரும்புகின்றனர்.

அக்டோபர் 30ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரையிலான காலகட்டத்தில் தீபாவளி விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வதற்காக ஜனவரி ஒன்றாம் தேதி முதல் செப்டம்பர் 30 தேதி வரை ஹோட்டல்ஸ்.காம் என்ற வெப்சைட்டில் அதிகம் பேர் சுற்றுலாதலங்கள் குறித்த விபரங்களை தேடியுள்ளனர். இது தொடர்பான அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட பட்டியலில் துபாய் முதல் இடத்தில் உள்ளது. வெளிநாடுகளில் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாக துபாய் அதிகம் பேரால் விரும்பப்படுகிறது. அடுத்தபடியாக இந்தோனேஷியாவில் உள்ள பாலி, தாய்லாந்தில் உள்ள புக்கெட் , பாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா செல்வதற்கு பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள உதய்பூர், மும்பை, டெல்லி உள்ளிட்டவை டாப் டென் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

நடுத்தர குடும்பங்களுக்கு எட்டாக்கனியாக இருந்த வெளிநாடு சுற்றுலா என்பதும் எளிதான ஒன்றாக மாறி வருகிறது. சுற்றுலா ஏஜென்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். இந்த ஏஜென்சிகள் டிக்கட், தங்குமிடம், கைடு உட்பட அனைத்து வசதிகளையும் நமக்கு ஏற்படுத்தி கொடுக்கின்றன. இதற்காக குறிப்பிட்ட தொகையை மட்டும் செலுத்தினால் போதுமானது. மீதமுள்ள தொகையை எளிதான தவணை முறையில் கட்டுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாம் விரும்பும் இடங்களை தேர்வு செய்துவிட்டோமானால், எத்தனை பேர் செல்கிறோம், எத்தனை நாட்கள் தங்கியிருப்போம், எந்த மாதிரியான வசதி படைத்த ஹோட்டல்கள் அல்லது தங்கும் விடுதிகள் தேவை என்பது போன்ற விவரங்களை நாம் டிராவல் ஏஜென்சிகளிடம் தெரிவித்தால் டிக்கட் உட்பட அதற்காக ஆகும் மொத்த செலவு, முதலில் செலுத்த வேண்டிய கட்டணம், மாதந்தோறும் செலுத்த வேண்டிய தவணை உட்பட அனைத்து விவரங்களையும் சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் தெரிவித்துவிடுகின்றன. இதன் மூலம் வெளிநாடு சுற்றுலா செல்வது என்பது எளிதான நடைமுறையாக மாறிவிட்டது.

தீபாவளி விடுமுறை முன்பதிவு அதிகரிப்பு
* ஏஜென்சிகள் வழங்கும் டிக்கெட்டில் பெயர், பயணத் தேதி, புறப்படும் இடம் மற்றும் சென்று அடையும் இடம் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும்.
* வெளிநாடு சுற்றுலாக்களுக்கு ஏஜென்சி மூலம் செல்வோர் ரிட்டன் டிக்ெகட்டையும் உறுதி செய்துவிட்டு செல்வது அவசியம்.
* பாஸ்போர்ட், டிக்ெகட் போன்ற ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
* எந்த ஊரில் எந்த ஓட்டலில் தங்கியிருக்கிறோம் என்பது குறித்த விவரங்களை உறவினர்களுக்கு தெரியப்படுத்துவது முக்கியம்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-