
வி.களத்தூர். அக் 25.
கடந்த 15 வருடங்களாக வி.களத்தூர் ஜாமிஆ பள்ளிவாசல் அருகில் இயங்கிய நமதூர் அஞ்சல் அலுவலகம் நாளை முதல் ( 26-10-2016) முதல் வண்ணாரம்பூண்டி பெருமாள் கோயில் தெருவில் உள்ள சின்னப்பொண்ணு W/O ராஜேந்திரன் வீட்டில் செயல் பட உள்ளது. இது வி.களத்தூர் மக்களுக்கு பெரிய இழப்புதான். நமது ஊர் மக்கள் குறிப்பாக பெண்கள் பலர் போஸ்ட் ஆபீஸ்ல் அக்கவுண்ட் ஓப்பன் செய்து உள்ளனர்.மாதாந்திர சிறு சேமிப்பு திட்டத்திலும், இன்சூரன்ஸ் பாலிஸி திட்டத்திலும் சேர்த்து உள்ளனர். அவர்கள் இனி வண்ணாரம்பூண்டி செல்ல வேண்டும். வி.களத்தூர் போஸ்ட் ஆபிஸ்க்கு தைக்கால், மற்றும் மேட்டுச்சேரி ஆகிய இடங்களில் அமைக்க குறைந்த வாடகையில் விண்ணப்பித்து இருந்தனர். அங்கு போய் இருந்தால் நமது ஊர் மக்களுக்கு மேலும் சிரமம் இருந்து இருக்கும்.


0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.