அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


Image result for தீபாவளி பட்டாசுக் கடைபெரம்பலூர்


பெரம்பலூர்:
தீபாவளி பட்டாசுக் கடைகளை புதிதாகத் திறக்க முறையான அனுமதி பெற்று விதிமுறைகளையும் கட்டாயம்  பின்பற்ற வேண்டும் என வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தீபாவளி என்றால் பட்டாசுதான் நினைவுக்கு வரும். சிவகாசிப் பட்டாசுகளுக்குப் போட்டியாக சீனத்துப் பட்டாசுகளும் அணிவகுத்துள்ள சூழலில், சிறுவர், சிறுமியரை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்துவதற்கான விற்பனை மந்தமாகவே தொடங்கியுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் நகரிலும், முக்கிய ஊர்களிலும் பட்டாசுக் கடைகள் திறப்பது வழக்கம். இவர்கள் நேரடியாக சிவகாசியிலிருந்து கொள்முதல் செய்யும் நிலையில், இவர்களிடமிருந்து கிராமப்புற கடைகள் பட்டாசுகளை வாங்கி விற்பனை செய்யும். இந்நிலையில் பிரதான கடைகளைத் திறப்பதற்கான அனுமதிகளும், பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும் நடப்பாண்டு கடுமையாக்கப்பட்டுள்ளது.

இருந்தும் பெரம்பலூர் நகரில் சுமார் 25 கடைகளும், பாடாலூர், அரும்பாவூர், பூலாம்பாடி, வாலிகண்டபுரம், வி.களத்தூர், லெப்பைக்குடிகாடு, செட்டிக்குளம், குன்னம், வேப்பூர் உள்ளிட்ட இடங்களை சேர்த்து மாவட்ட அளவில் சுமார் 40 கடைகளுக்கு அனுமதி பெறப்படுவதுண்டு. கடந்த ஆண்டு கனமழை காரணமாக பட்டாசு விற்பனையே பாதிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு பட்டாசு கடைகளைத் திறப்பதற்கான விதிமுறைகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

இதன்படி பட்டாசு கடைகளில் தீயணைப்புக் கருவி, மணல் நிரப்பிய வாளிகள், தண்ணீர் வாளிகள் இருப்பு வைத்திருக்க வேண்டும். கடை முன்பு புகை பிடிக்காதீர்கள் என்ற வாசகம் இடம் பெற்றிருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை அருகில் வைத்திருக்கக் கூடாது. புதிதாக விண்ணப்பித்து விற்பனை செய்ய அனுமதி கோரியிருந்தால், காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றின் நேரடி சோதனைகளுக்குப் பிறகு வழங்கப்படும் தடையின்மை சான்றிதழ் மற்றும் முறையான விற்பனை உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும்.

ஏற்கனவே பட்டாசுக் கடை நடத்திவரும் வியாபாரிகள் தங்களது உரிமத்தை புதுப் பித்துக் கொண்டிருக்க வேண்டும். கடைகளுக்கு முன்புற வழியோடு, பின்புறமோ அல்லது பக்கவாட்டிலோ மற்றொருவழி அமைத்திருக்க வேண்டும், குறிப்பிட்ட அளவு சப்தத்திற்குமேல் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது, தடைசெய்யப்பட்ட பட்டாசு வகைகளை விற்கக் கூடாது என்பன போன்ற விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. புதிய கடைகளுக்கு ஆர்டிஓவால் வழங்கப்படும் உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தும் கடந்த ஆண்டைப்போல இந்தாண்டு பட்டாசு விற்பனை பரபரப்பாகத் தொடங்கப்படாமல் மந்தமாகத்தான் தொடங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆண்டுக்கு ஆண்டு பட்டாசு மீதான சிறுவர் சிறுமியரின் மோகம் குறைந்தபடியே உள்ளதென ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-