அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
 வி.களத்தூர்.
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் சனிக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 11 மணிக்கு தொடங்கிய மழை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் பலத்த காற்று மற்றும் இடியுடன் பரவலாக பெய்தது. குறிப்பாக, வேப்பந்தட்டை, பெரம்பலூர் வட்டாரத்தில் பலத்த மழை பெய்தது. இதனால், பெரம்பலூர் நகரின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை செட்டிகுளம்- 3 மி.மீ, பெரம்பலூரில் 58 மி.மீ, வேப்பந்தட்டையில் 40 மி.மீ, தழுதாழை பகுதியில் 27 மி.மீ, பாடாலூர் பகுதியில் 3 மி.மீ என 131 மில்லி மீட்டர் மழை பெய்தது. இந்த மழையால், பெரம்பலூர் நகரில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது. இதனால், நகர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இருப்பினும், கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டிருந்த மக்கள், குளிர் காற்று வீசியதால் மகிழ்ச்சியடைந்தனர்.
போதிய மழையின்றி பருத்தி மற்றும் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வறட்சியால் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது பெய்யத் தொடங்கிய மழையால் எவ்வித பயனும் இல்லை எனத் தெரிவித்தனர் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-