அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


ஜித்தா(15 அக் 2016): ஹஜ் விசா காலம் தீரும் முன்பு அனைத்து ஹஜ் யாத்ரீகர்களும் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று சவூதி அரசு கோரியுள்ளது.


ஹஜ் பயணம் மேற்கொள்ளும் வெளி நாட்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கு சவூதி அரசு 45 நாட்கள் விசா அனுமதி அளித்துள்ளது. இந்த நாட்களுக்குள் ஹஜ் யாத்ரீகர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று சவூதி அரசு கோரியுள்ளது.

விசா காலம் முடிந்த பின்பும் மீறி சவூதியிலேயே தங்கும் ஹஜ் யாத்ரீகர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்று சவூதி அரசு எச்சரித்துள்ளது. மேலும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களும் கடும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சவூதி அரசு தெரிவித்துள்ளது.

ஹஜ் யாத்ரீகர்கள் மக்கா, மதீனா தவிர சவூதியின் வேறு எந்த பகுதிகளுக்கும் செல்ல அனுமதி இல்லை. மேலும் வேலை செய்யவும் அனுமதி இல்லை. மீறும் ஹஜ் யாத்ரீகர்களுக்கு 50 ஆயிரம் ரியால் அபராதமும், 6 மாத சிறைத் தண்டனையும் வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு அடைக்கலம் மற்றும் வேலை கொடுப்பவர்களுக்கு 1 லட்சம் ரியால் வரை அபராதமும் 6 மாத சிறைத் தண்டனையும் வழங்கப்படும். அதன் பின்பு அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள்.

அதேபோல ஹஜ் ஏஜென்சிகளையும் சவூதி குடியுரிமை அமைச்சகம் எச்சரித்துள்ளது. ஹஜ் யாத்ரீகர்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்கு 1 லட்சம் ரியால் அபராதம் விதிப்பதோடு, 5 வருடத்திற்கு வெளிநாட்டு விசா வழங்க தடையும்,விதிக்கப்படும் என சவூதி அரசு கூறியுள்ளது.

இவ்வருடம் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட ஹஜ் யாத்ரீகர்களில் 80 சதவீத வெளிநாட்டு ஹஜ் யாத்ரீகர்கள் இதுவரை சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-