அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...அருமை நபிகளார் காலத்திற்குப் பின் சவுதி அரசை ஆட்சி புரிய எத்தனையோ ஆட்சியாளர்கள் வந்து போயுள்ளனர். வரலாற்றுப் பதிவுகளின்படி அவர்களது ஆளுமைகள் ஏற்ற இறக்கம் கொண்டதாகவே காணப்படுகிறது.
நாம் ஒரு நூறு ஆண்டுகளை மட்டும் எடுத்து ஆராய்ந்து பார்த்தோமெனில் அவற்றில் இன்றைய ஆட்சியாளர் மன்னர் சல்மான் அவர்கள் தனிச் சிறப்புகள் கொண்டவராக திகழ்கிறார்.
உதாரணத்திற்கு சில:
1) "என் தாய் மண் சவுதியில் இஸ்லாமிய சட்டங்கள் பரிபூரணமாக நிறைவேற்றப்படும். என் குடும்பத்தினரோ... உறவினரோ... யார் தவறு செய்தாலும் அவர்கள் இஸ்லாமிய சட்டங்கள்படி தண்டிக்கப்படுவர்; நிச்சயமாக அதில் பாரபட்சம் காட்டப்படமாட்டாது"; "அதே போல் உலகில் எங்கெல்லாம் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் பாதிக்கப்படும் முஸ்லிம்களுக்கு சவுதி அரேபியா அரவணைப்பை வழங்கும்" என்பதனை தான் ஆட்சிப் பொருப்பேற்ற முதல் பிரகடனமாக அறிவித்தது.
2) அரசு கருவூலத்தில் நிரம்பிக் கிடந்த அமெரிக்க டாலர்களை அரசு ஊழியர்களுக்கு சிறப்பு போனஸ்களாகவும் - பொதுமக்களுக்கு சிறப்பு உதவி நிதிகளாகவும் -சோமாலியா, எத்தியோப்பியா - பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு தான தர்மங்களாகவும் வாரி இறைத்தது. (நேபாளம் நில நடுக்கத்திற்கும் வாரிக் கொடுத்தது.)
3) 1 லட்சம் கோடி டாலர் மதிப்பிற்கு அமெரிக்காவிடம் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்து விட்டு - அதே அளவு ரஷ்யாவிலும் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்து சவுதி அரேபியா அமெரிக்க அடிமை நாடு என்னும் நிலையை தகர்த்து பொதுவான நட்பு நாடு என்னும் மரியாதையை நிலை நிறுத்தியது.
4) நேச நாடுகள் கூட்டுப்படை என்னும் பெயரில் எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா நாடுகளுக்குள் தான் நினைத்தபொழுதெல்லாம் நுழைந்து சுரண்டிக்கொண்டிருந்த அமெரிக்கா தலைமையிலான ஐரோப்பிய ராணுவ படைகள் இனி எக்காலத்திலும் வளைகுடா பிராந்தியத்திற்குள் அடியெடுத்து வைக்காவண்ணம் முழுமையாக அவர்களை தடுக்கும் நோக்கில் வளைகுடா இஸ்லாமிய நாடுகளை ஒன்றிணைத்து "இஸ்லாமிய நாடுகள் கூட்டுப்படை" உருவாக்கி வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருப்பது.
5) 56 இஸ்லாமிய நாடுகளையும் சவுதி அரேபியாவின் தலைமையின் கீழ் ஒன்றிணையச் செய்தது.
6) இஸ்ரேல் பாலஸ்தீனத்தை தாக்கும் பொழுதெல்லாம் அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுத்து தாக்குதலை நிறுத்தியது; மூன்று முறை இப்படி செய்தும் மீண்டும் நான்காவது முறையாக இஸ்ரேல் தாக்குதல் தொடுத்த பொழுது "இனியும் தொடர்ந்தால் இஸ்லாமிய கூட்டுப்படை" இஸ்ரேலை தாக்கும் என பகிரங்கமாக எச்சரித்தது. (அதற்குப் பிறகு இஸ்ரேல் இதுவரை பாலஸ்தீனை தாக்கவில்லை).
7) பாலஸ்தீனை முழுமையாக தத்தெடுத்து கணக்கிலடங்கா பணத்தை கொட்டி புணரமைத்துக் கொண்டிருப்பது.
8) ஏமன் அரசு கிளர்ச்சியாளர்களால் கவிழ்க்கப்பட்டது பொழுது இஸ்லாமிய கூட்டுப்படை தாக்குதலை கொண்டு கிளர்ச்சியாளர்களிடமிருந்து ஆட்சியை மீட்டு முந்தைய ஆட்சியாளர்களிமே ஒப்படைத்தது.
9) சிரியாவிலிருந்து வந்த அகதிகள் 2 லட்சம் பொதுமக்களை அரச விருந்தினர்கள் என அறிவித்து அவர்கள் அனைவருக்கும் நிரந்தர வீடு, உணவு வழங்கிக் கொண்டிருப்பது. அவர்களுக்கு சவுதி குடியுரிமை வழங்க ஆலோசித்துக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது.
10) சிரியா ராணுவத்தின் பொதுமக்கள் மீதான தாக்குதலை முழுமையாக நிறுத்திட ரஷ்யாவுடன் மும்முரமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பது. ஒருவேளை சிரிய அரசு எதற்கும் கட்டுப்படாத நிலை வருமாயின் ரஷ்யாவுடன் இணைந்து இஸ்லாமிய கூட்டுப்படையினர் உக்கிரமான தாக்குதல் தொடுக்க தயாராக்கி வைத்திருப்பது.
11) 2015 ஹஜ்ஜில் ஏற்பட்ட கிரேன் விபத்திற்கு இரு கைகளையும் நெஞ்சின் மீது வைத்துக்கொண்டு பொறுப்பேற்றது. விபத்தில் இறந்தவர்களுக்கும் காயமுற்றவர்களுக்கும் நிவாரண நிதிகளை அள்ளி அள்ளி கொடுத்தது.
12) சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிய துவங்கியதுமே "ஆயில் சாரா பொருளாதார மேம்பாடு" என்னும் சவுதி தன் சரித்திரத்திலேயே கண்டிராத ரியல் எஸ்டேட், தொழிற்சாலைகள் என்று பொருளாதார அமைப்பையே மாற்று திசைக்கு திருப்பி அதிலும் பெறுவெற்றி பெற்றுக் கொண்டிருப்பது.
இப்படி மன்னர் சல்மான் அவர்களின் ஆட்சி தன்நாட்டு மக்கள் நலம் - பொருளாதாரம் - ராணுவம் - ஷரீஅத் சட்டங்களை பேணுதல் - உலக அரசியல் என்று ஒவ்வொன்றிலும் மிகச்சிறந்த ஏற்றம் கண்டு சீரிய பாதையில் சீரிப் பாய்ந்து கொண்டிருக்கின்றது......

அல்ஹம்துலில்லாஹ்......
அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் பரிபூரண உடல்நலத்தையும் வழங்குவானாக!

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-