அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


துபாய், அக்-19
கடுகு சிறிது காரம் பெரிது எனும் உதாரணத்திற்கு ஈடாக திகழும் துபையில் செயல்படும் பஸ் நிறுத்தங்கள் 24 மணிநேரமும் குளிரூட்டப்பட்டவை, இலவச வைபை வசதி கொண்டவை, கார்கோ கூரியர் சேவையுடன் மினி பெட்டிக்கடையும் செயல்பட்டு வருகின்றன. மேலும் தானியங்கி இயந்திரம் மூலம் மொபைல் ரீசார்ஜ், டெலிபோன், மின்சாரம் தண்ணீருக்கான பில் கட்டும் வசதி என பல்வேறு நவீன வசதி வழங்கி வருபவை.

இந்நிலையில், சுமார் 450,000 பிலிப்பைன்ஸ் தேசத்தவர்கள் துபையில் மட்டும் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களின் குறைகள், பிரச்சனைகளை தெரிந்து முறையாக களைந்து உதவும் நோக்கில் சத்வா, மன்கூல், பனியாஸ், பர்துபை மற்றும் அல் ரிக்கா ஆகிய பஸ் நிறுத்தங்களில் 'கபயான் கார்னர்' எனும் பெயரில் புகார் பெட்டிகளை அங்கிருந்து செயல்படும் கூரியர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து நிறுவியுள்ளது துபையிலுள்ள பிலிப்பைன்ஸ் துணை தூதரகம்.

வாரம் ஒருமுறை பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களின் புகார் கடிதங்களை துபையிலுள்ள பிலிப்பைன்ஸ் துணை தூதரகத்தில் கூறியர் நிறுவனம் கொண்டு சேர்த்த பின் புகார்கள் மீது தொழிலாளர் நலன் காக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற எந்த தேசத்தவர்களையும் விட இந்தியர்களே துபையில் அதிகம், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் அதிகம் என்றிருக்கையில் பிலிப்பைன்ஸ் தூதரகம் காட்டியுள்ள இந்த நல்ல முன்மாதிரியை பின்பற்ற இந்திய தூதரகமும் முன் வர வேண்டும். குறிப்பாக தூதரக அலுவலகங்களுக்கு எளிதில் வர இயலாத வீடு, கடைகளில் வேலைபார்ப்போருக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும்.

Source: Construction Week / Msn
தமிழில்: 
அதிரை நியூஸ் நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-