அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஏமன் தேச கிளர்ச்சியாளர்கள் என உலக ஊடகங்களால் அழைக்கப்படும் சியாபிரிவை சேர்ந்த ஹோத்தி (houthi) பயங்கரவாத கூட்டம் மக்காவை நோக்கி ballistic missile ரக ஏவுகனையை ஏவியது . இதை கண்டுபிடித்து சவுதி இராணுவம் மக்காவில் இருந்து 65 kilometre தொலைவில் தடுத்து அந்த ஏவுகனையை அழித்துள்ளது.
வியாழன் அன்று இச் சம்பவம் நடந்துள்ளது .

இதை பற்றி ஏமன் தேச பிரதமர் குறிப்பிடும்போது , இரான் இவர்களுக்கு இதை உபயோகிக்க பயிற்ச்சி அளித்திருந்ததாக குற்றம் சாட்டியுள்ளார் . ஏவுகணை அனுப்பியதை தொடர்ந்து சவுதி விமான படை ஏவியவர்களை அளித்ததாக தகவல் தெரிவித்துள்ளனர் . பல இசுலாமிய நாட்டு தலைவர்களும் இரான் நாட்டிற்க்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இரான் ஹோத்தி தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்குவது குறிப்பிடதக்கது .
தாக்க நினைத்த புல்லுருவிகளும், அதை நினைத்து ஆனந்தப்படும் தறுதலைகளும், உண்மையில் இதை நினைத்து வருத்தப்படுவோர்களும் ஒன்றை மனதிற்கொள்ளவேண்டும். இறைவன் வாக்களித்துள்ளான், மக்கா அபயபூமி என்று, இங்கே அபயம் கிடைக்குமே தவிர, அபாயம் எதுவும் நெருங்கிவிடாது. இது அல்லாஹ்வின் ஆலயம், அதை அல்லாஹ்வே பொறுப்பேற்றுக்கொண்டுள்ளான். கஃபாவை அழிக்கவந்த ஒரு யானைப்படையையே சிறு குருவிகளின் அலகின் சுமந்துவரும் அளவு அற்ப அளவுள்ள கல்லைக்கொண்டு போரடித்த வைக்கோல் பதறுபோல் அந்த யானைப்படையினரை அல்லாஹ் அழித்துள்ளான்.
இன்னும் கியாம நாள் நெருக்கத்தில் உலகை தன் ஆதிக்கத்தில் கொண்டுவர உலகில் தன் கால்படா இடம் இல்லை என்ற அளவு உலகை சுற்றிவரும் தஜ்ஜால் கூட மக்காவினுள்ளும், மதினாவினுள்ளும் நுழைய முடியாது அல்லாஹ் பாதுகாப்பேன் என்றும் அதுதான் அவனின் அழிவிடம் என்றும் கூறி உள்ளான்.
தஜ்ஜாலுக்கும், யானைப்படைக்கும் இந்த நிலை என்றால், இந்த அற்பர்களுக்கு என்ன நிலை? இன்ஷா அல்லாஹ் இவர்களின் அழிவு நெருங்கிவிட்டதாகவே உணர்கின்றேன். இன்னொரு நல்ல விஷயம் இதில் உள்ளது. ஷியா என்பது இஸ்லாத்தின் உட்பிரிவு என்றும், ஹோத்தி, மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் எல்லாம் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று பொய் பிரச்சாரம் செய்யும் இஸ்லாமிய விரோதிகளுக்கும், அதை நம்பும் சில அப்பாவிகளுக்கும் இந்த சம்பவம் அவர்கள் எல்லாம் இஸ்லாமியர்கள் அல்ல என்பதையும், அவர்கள் எல்லாம் இஸ்லாமிய விரோதிகளே, அவர்கள் பெயர்களில் நடக்கும் எந்த தீவிரவாத செயலுக்கும் இஸ்லாத்திற்க்கும், உண்மையான இஸ்லாமியர்களுக்கு தொடர்பில்லை என்பதை உலகிற்க்கு உணர்த்தும் நிகழ்வாகவே இதை காண்கின்றேன்.
#Houthi ballistic missile aimed at holy city of #Makkah intercepted

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-