அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் : சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தி பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கின்னஸ் சாதனை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் ரோட்டரி கிளப் மற்றும் பெரம்பலூர் ரோவர் கல்வி நிறுவனம், வள் ளலார் ஹோண்டா சார்பில் சுற்றுச்சூழல், உடல்நலம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பை-சைக்கிள் என்ற தலைப் பில் கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இளைஞர்களிடையே சமூகம், கலாச்சாரம், வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டிருந்தாலும் சைக்கிள் ஓட்டுவதன்மூலம் உடற்கூறு தகுதி பெற இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த 500-க்கும் மேற்பட்ட மாணவர் கள் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி நடந்தது.

இதனையடுத்து கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் 50மீட்டர் நீளத்திலும், 37மீட்டர் அகலத்திலும் சைக்கிள் வடிவில் 2,050பேர் 5நிமிடம் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியை இந்தியன் புக் ரெக்கார்டு அமைப்பின் அதிகாரி முருகானந் தம் நேரில்பார்வையிட்டு சாதனையை அங்கீகரிக்கும் விருது வழங்கினார். மேலும் கின்னஸ் சாதனைக்காக இந்தியன் புக் ரெக்கார்டு சார்பாக இந்த நிகழ்ச்சி பரிந்துரைக்கப்பட உள்ளது. கடந்த சிலவாரங்களுக்கு முன்பு ரோவர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இதே ரோட்டரி சங்கத்துடன் பள்ளி மாணவ,மாணவியர் 16,500 பேர் ஒன்றிணைந்து நிகழ்த்திக்காட்டிய சாதனைக்கு கின்னஸ் அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு பெரம்பலூர் மாவட்ட எஸ்பி சோனல்சந்திரா தலை மை வகித்தார். சாதனைத் திட்டத்திற்கான திட்டத்தலைவர் அரவிந்தன், திட்ட செயலா ளர் கார்த்திக், ரோட்டரி சங்தத்தின் பெரம்பலூர் தலைவர் கிருஷ்ணன், செயலாளர் செந்தாமரைக் கண்ணன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ரோட்டரி கிளப் கவர்னர் முருகானந்தம், ரோட்டரி சிறப்புத்திட்ட இயக்குநர் ஆனந்த ஜோதி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் ரோவர் கல்வி நிறுவன துணைத் தலைவரும், ரோட்டரி துணை ஆளுநருமான ஜான்அசோக் வரதராஜன், ரோட்டரிசங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன், மாருதி ரமேஷ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-