அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர் : பெரம்பலூர் கலெக்டர் அலுவலக அறிவியல் பூங்காவை அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் தினமும் ஒவ்வொரு பள்ளியாக பார்வையிட ஏற்பாடு. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் அமைக் கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவை மாணவ, மாணவியர் பார்வையிட்டு தங்களின் அறி வியல், தொழில்நுட்பச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு ஆதிதராவிட நல உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6முதல் 9வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் பார்வையிட பெரம்ப லூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசு, அரசு ஆதிதராவிட நல, உயர், மேல்நிலைப் பள்ளிகளை ஒருங்கிணைத்து பூங்காவைப் பார்வையிடுவதற்கான அட்ட வணை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் அக்டோபர் மாதம் 4ம்தேதி முதல் 2017ம் ஆண்டு மார்ச்மாதம் 3ம் தேதி வரையுள்ள அனைத்து அரசுப் பள்ளி வேலை நாட்களில் சம்மந்தப்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் இந்த அறிவியல் பூங்காவிற்கு அழைத்துவரவும், அறிவியல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் உபகரணங்கள் குறித்து மாணவ, மாணவியருக்கு உரிய விளக்கம் அளிக்கவும் பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பூங்காவிலுள்ள அறிவியல் உபகரணங்கள் செயல்ப டும் விதங்கள் குறித்து விரிவாக மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைப்பர். இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவியல் தொடர் பான தொடர்பான வளர்ச்சி மேம்பாடு அடைவதுடன், அவர்களின் கல்வியிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதன்படி நேற்று (4ம்தேதி) லாடபுரம் அரசு உயர்நிலைப் பள் ளியைச்சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் அறிவியல் பூங்காவிற்கு வந்து அறிவியல் உபகரணங்களை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-