அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சவுதியில் உள்ள அல்மராய் பால் நிறுவனத்தில், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தது.

இது சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏமன் மீதான சவுதி அரேபியா நடத்தும் போர் செலவும் அதிகரித்ததால் சவுதி பட்ஜெட்டில் மிகப்பெரிய ஓட்டை விழுந்தது. இதனால் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இறங்கியுள்ளார்.

அங்கு பெட்ரோலைவிட தண்ணீர் பாட்டில் விலை அதிகமாக உள்ளது. சவுதி அரேபிய அரசின் அல்மராய் பால் பண்ணை நிறுவனத்துக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இங்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ஹால்ஸ்டீன் பசுக்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த நெதர்லாந்து நாட்டு பசுக்கள் அதிகளவில் பால் கறக்கக் கூடியவை.இதற்காக அல்பல்பா என் புற்செடி மட்டும் சவுதியில் வளர்க்கப்பட்டு வந்தது. தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், அதை வளர்க்க வேண்டாம் என சவுதி அரசு கூறிவிட்டது.

தற்போது பால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், பால் விலையை கூட்ட அல்மாராய் நிறுவனம் முடிவு செய்தது. ஆனால் சவுதி அரசு அனுமதிக்கவில்லை. ‘‘சவுதி இளவரசரின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதை அவர் திறம்பட சமாளித்தால் எதிர்காலத்தில் மன்னராவார். இல்லையென்றால் அவருக்கு எதிர்க்காலம் இல்லை’’ என்கிறார் ரியாத்தில் உள்ள கிங் சவுத் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் போராசிரியர் இப்ராகிம் அல்னாஸ்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-