அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 துபாயில் நைஃப் ரோடு, ப்ரிஜ்முரார், பராஹா பகுதிகளில் ஆப்பிரிக்கர்கள் அதிகமாக தங்கி இருக்கின்றனர்.

சமீபநாட்களில் இந்தியர்களைக் குறிவைத்து இவர்களில் சில பேர் செய்யும் நூதன திருட்டுக்கு பலரும் ஆளாகியுள்ளனர்.

சாலையில் நடந்து செல்லும்போது திடீரென நம்மீது எச்சில் துப்பியோ அல்லது வாந்தியோ எடுக்கின்றனர். இதனால் நிலைகுலைந்து போனநிலையில் எதிர்பாராத விதமாக நடந்து விட்டதுபோல், "ஸாரி...ஸாரி" என்று பவ்யமாக பேசி நம்மீது படிந்துவிட்ட எச்சில்/வாந்தியைச் சுத்தம் செய்வதுபோல் நம்பவைத்து அவர்கள் மீது கோபமோ சந்தேகமோ ஏற்படாதவாறு நடித்து பிக்பாக்கெட் அடித்து விடுகின்றனர்.

அருவருப்பு கருதி பலரும் ஒதுங்கிச் சென்று விடுவதால் இந்தத் திருடர்களுக்கு மிகவும் வசதியாகி விடுகிறது. திடீரென தெருவில் நம்மீது வாந்தி எடுத்த அருவருப்பினால் வீடு சென்று சுத்தம் செய்யும் அவசரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் உடனடியாக இதை உணர்வதில்லை. வீட்டிற்கு வந்தபிறகே இதுபோன்று பறி கொடுத்திருப்பது தெரிய வருகிறது.

என்னுடன் பணியாற்றும் அலுவலக கேரள நண்பரும் இவ்வகையில் பாதிக்கப்பட்டார். பர்ஸில் வைத்திருந்த ரொக்கம், கிரடிட் கார்ட், எமிரேட்ஸ் ஐடி உள்ளிட்ட அத்தனையையும் திருடிச்சென்று விட்டான் பிக்பாக்கெட்.

அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா இல்லாததை அறிந்துகொண்டு இதுபோல் செய்கிறார்கள்

போலீஸில் புகாரளித்தபோது கூடிய விரைவில் நடவடிக்கை
எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஐடியைத் திருட்டு கொடுத்த புகாரை வைத்து புது ஐடி எடுப்பதற்கும் இவரே செலவளிக்க வேண்டும். அடுத்த எட்டு மாதத்தில் மீண்டும் புதுப்பிக்க வேண்டியிருந்தாலும் அதுவரை வேறொன்றும் எடுக்க வேண்டும் என்றும் சொல்லி விட்டதால் வேறுவழியின்றி எடுத்தே ஆக வேண்டும்.

கொடுமை என்னவென்றால் எமிரேட்ஸ் ஐடி பின்புறம் நமது பிறந்த வருடம், கையெழுத்து போன்றவையும் இருப்பதால் இதைவைத்து கிரடிட் கார்டிலும் உடனடியாகக் கையாடல் செய்துவிட முடியும். மட்டுமின்றி கார் லோன் எடுக்கவும் இவற்றை மட்டும் வைத்தே முடியும் என்பதால் திருடிய எவரும் இவ்வாறு செய்து நமக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்த முடியும்!

இதுபோன்ற சூழல்களை எதிர்கொள்வதற்கு ஏதேனும் வழிகள் இருந்தால் பகிரவும். இந்தப் பதிவையும் நண்பர்கள் வட்டாரத்தில் பகிர்ந்து விழிப்புணர்வூட்டவும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-