அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
உஷார்… #உஷார்… #உஷார்…

#கஷ்டப்பட்டு(கடன் வாங்கி) படித்து முடித்து விட்டு இளைஞர்கள், பட்டதாரிகள் என வேலைக்காக அலைந்து திரிந்து கடைசியாக கிடைத்த வழியில் தனியார்(Ex. naukri.com, monster.com, shine.com…etc) வலைத்தளங்களில்(website) பதிவு செய்து வைத்திருக்கும் படித்த வேலையில் அனுபவம் இல்லாதவர்கள்(Fresh candidate), அனுபவம் உள்ளவர்கள்(Experienced candidate) ஆகியோரின் விபரங்களைத்(Profile) திருடுகிறார்கள்.

#உங்களுக்கு ஒரு தொலைபேசியிலிருந்து(Landline or Mobile) அழைப்பு வரும். அவர்கள் வேலை வாங்கித்தரும் நிறுவனத்திலிருந்து(Consultancy or Manpower Agency) பேசுவதாகக் கூறுவார்கள்.

#பின்னர் அவர்களை தொலைபேசியில் அழைத்து திறமையாகப் பேசி உங்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில்(நம் விருப்பத்திற்கு தகுந்தவாறு) வேலை வாங்கித் தருவதாகக் கூறுவார்கள்.

#அதன் பிறகு உள்நாடு மற்றும் வெளிநாட்டின் பிரபலமான நிறுவனங்களின்(Company) பெயர்களைக் கூறி, அதில் மிகப்பெரிய தொகையை சம்பளமாகக் கூறுவார்கள்(Ex. SR/AED/QR.5000 – 6000 + Food + Accommodation + Transportation + Insurance + Family visa + Family Appartment)

#அதன் பிறகு வேலைக்காக ஏங்கித் தவிக்கும் அவர்களின் நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி உடனே Onlineல் வரச் செய்து அவர்களின் சொல்வதை பின்பற்றி உடனே Onlineல் பதிவு செய்ய பதிவுத்தொகை(Rigistration Fees) எனக்கூறி (Rs.2500, 3500….5000வரை) பணப்பரிமாற்றம்(Fund Transfer) செய்ய வைக்கிறார்கள்.

#அதன் பிறகு இவர்களை தொடர்பு கொள்ள முடியாது. வேலைக்கும் எந்த வித உத்திரவாதமும் கிடையாது.

#அந்த நிறுவனங்களின் விபரங்களையும், பதிவு செய்யும் முறைகளையும் மின்அஞ்சலில்(Email) அனுப்பச் சொன்னால் அனுப்ப மாட்டார்கள்.

#தயவு செய்து இவர்களிடம் உங்களின் பணத்தை பறிகொடுத்துவிட்டு ஏமாந்துவிடாதீர்கள்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-