அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறிவியல் பூங்காவை பார்வையிட வந்த மாணவர்களுக்கு குறும்படம் மூலம் அறிவியல் நிகழ்வுகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

அறிவியல் பூங்கா


பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த பூங்காவில், அறிவியல் தத்துவம் மூலம் இயங்கும் அறிவியல் உபகரணங்கள் உள்ளிட்டவை அதற்கான விளக்க குறிப்புகளுடன் உள்ளன. தினமும் காலை, மாலை வேளைகளில் பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் உள்ளிட்டோர் இந்த பூங்காவை பொழுது போக்கிற்காகவும், அறிவியல் உண்மைகளை அறிந்து கொள்வதற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 4–ந்தேதியிலிருந்து பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அறிவியல் பூங்காவை பார்வையிட்டு வருகின்றனர்.

அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்காக...


இந்த நிலையில், அறிவியல் பூங்காவிற்கு வருகை தரும் மாணவ, மாணவிகளின் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கும் பொருட்டு ஒரு தனியார் அறக்கட்டளையின் சார்பில் அறிவியல் சார்ந்த குறும்படங்கள், அறிவியல் உண்மைகள் தொடர்பான நேரடி செயல்முறை விளக்கங்கள், அறிவியல் தத்துவங்கள் குறித்து விளக்கங்கள் கலெக்டர் அலுவலக அரங்கில் அளிக்கப்பட்டன. அறிவியல் பூங்காவை பார்வையிட்ட பின்னர் மாணவ, மாணவிகள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று அறிவியல் தொர்பான குறும்படங்களை பார்த்தனர். மேலும் அறிவியல் உபகரணங்களை பயன்படுத்தி அறிவியல் தத்துவங்களை அறிந்து கொண்டனர்.

பரிசு


இதைதொடர்ந்து மாணவர்களுக்கு அறிவியலிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டு, சரியான பதில் அளித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை அறக்கட்டளையின் திட்ட இயக்குனர் அறிவுக்கரசன் நேரடி செயல் விளக்கம் மூலம் தீர்த்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-