அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


சேலம்:
சேலத்தில் தனியார் பள்ளியில் ஷூவில் புகுந்த பாம்பு மாணவனை கடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பு கடித்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவன்.
சேலம்:

சேலத்தை அடுத்த உடையாப்பட்டி பிரிவு ரோட்டை சேர்ந்தவர் முரளிதரன். என்ஜினீயராக உள்ளார். தற்போதுதான் அந்தப்பகுதியில் வீடு கட்டி குடிபோனார். இவரது மகன் சத்யாஸ்(வயது 13). இவன் உடையாப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இன்று காலை பள்ளிக்கு சென்று வகுப்பறையில் இருந்தான். ஆசிரியர் பாடம் நடத்திய போது இவன் நெளிந்து கொண்டு இருந்தான். உடனே ஆசிரியர் இவனை விசாரித்த போது காலில் உள்ள ஷூவுக்குள் ஏதோ நெளிவதாக கூறினான். ஆசிரியர் உத்தரவின்பேரில் அவன் ஷூவில் இருந்து காலை வெளியே எடுத்தான், அப்போது காலில் ரத்தம் வடிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் ஷூவை பார்த்தனர். அப்போது இரண்டு அடி நீளம் உள்ள கட்டு விரியன் பாம்பு அதில் இருந்தது. அந்த பாம்பு கடித்ததில்தான் அவனுக்கு ரத்தம் வந்தது தெரிய வந்தது. பின்னர் பள்ளியில் உள்ள ஊழியர்கள் அந்த பாம்பை அடித்து கொன்றனர். அதன் பிறகு அந்த மாணவனை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மாணவனை கடித்த பாம்பையும் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து டாக்டரிடம் காண்பித்தனர்.

மாணவன் குடியிருக்கும் பகுதியில் ஏராளமான வயல் வெளிகளும், புதர்களும் உள்ளது, இது தவிர வி‌ஷப்பாம்புகளும் அங்கு உள்ளது. நேற்று பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவன் ஷூவை கழற்றி வாசலில் வைத்து இருக்கிறான். அப்போது கட்டுவிரியன் பாம்பு ஷூவுக்குள் புகுந்து உள்ளது. இதை கவனிக்காத மாணவன் ஷூவை காலில் போட்டு வந்து உள்ளான். பள்ளி வகுப்பறையில் வைத்து அவனை அந்த பாம்பு கடித்து உள்ளது தெரிய வந்து உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-