அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ரோஹிங்கியாக்களுக்கு எதிராக மியான்மர் ராணுவத்தால் செய்யப்படும் கொடுமைகள் புதிதாக ஒன்றயும் கண்டுபிடித்து கண்காணித்துள்ளனர் ரோஹிங்கிய சமூக ஆர்வலர்கள்

“மியான்மர் ராணுவம், கொன்றும், கொளுத்தியும், கொள்ளையடித்ததோடு நிற்காமல் இப்போது முஸ்லீம் பெண் மகள்களையும் கேட்கின்றனர்.
” மேலும் அந்த அறிக்கையில் “மியான்மார் ராணுவம் ரோஹிங்கிய கிராமங்களை புயல் போல் தாக்கியதோடு நிற்காமல், பெண் பிள்ளைகளை தங்களிடம் ஒப்படைக்கும்படி மிரட்டியுள்ளது.” என கூறப்பட்டுள்ளது.
“முஸ்லீம் சிறுமிகள் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் முகாம்களுக்கு அருகில் காணப்பட்ட பல சம்பவங்கள் நடந்துள்ளது. மியான்மரில் நடந்துவரும் கொடுமைகள் அரசாங்கத்தாலேயே திட்டமிட்டு நடத்தப்படுகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.
அகரன் மாநிலத்தில் சுமார் 1 மில்லியன் ரோஹங்கியாக்கள் அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். இவர்கள், 1982 இல் மியான்மர் அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்தின் மூலம் இவர்கள் பங்களாதேஷ் இலிருந்து சட்டவிரோதமாககுடியேறியவர்கள் என்று காரணம்காட்டி குடியுரிமை மறுக்கப்பட்டவர்களாவர். ஐ.நா இவர்களை “உலகில் மிகவும் துன்புறுத்தப்பட்ட முஸ்லீம் சிறுபான்மையினர்” என்று வகைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பர்மாவில் மீண்டும் முஸ்லீம் இன அழிப்பு: கண்டுகொள்ளாத உலகம்?

 புத்தர் போதித்தது அகிம்சையா? அல்லது நரவேட்டையா? பர்மாவில் நடப்பது என்ன?
(கோரமான புகைப்படங்களை மறைத்து பதிவிடுகிறோம்)

அன்பு-அகிம்சை என்று சொல்லிக் கொண்டே பௌத்த பிட்சுகள் நரமாமிசம் உண்ணும் அரக்கர்கள் போல மனிதர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறர்கள் அங்கே அன்றாடம் அடிமைகளைவிட மோசமான நிலையில்தான் இஸ்லாமியர்கள் வாழ வேண்டி உள்ளது.
மியான்மர் என்றழைக்கப்படும் பர்மாவில் அரகான் – ராகின் பகுதியில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இஸ்லாமியர்கள். அரசாங்கம் மற்றும் பயங்கரபவாத பௌத்த துறவிகளால் கொல்லப்பட்டு இனசுத்தகரிப்புச் செய்யப்படுவதை உலகில் யாரும் சட்டை செய்வதாய் இல்லை.
கம்போடியா பௌத்த நாடாக வேண்டும் என்ற வெறியில் கமெர் ரோக் முஸ்லிம்கள் லட்சக் கணக்கில் கொல்லப்பட்டார்கள். நம் கண்ணெதிரே அண்டை நாடான இலங்கையில் இதே இனவெறிதான் தலைவிரித்தாடுகிறது. அங்கு தமிழர்களும், தமிழ் முஸ்லிம்களும் பௌத்தவர்கள் அல்லாதவர் என்று முத்திரைக் குத்தப்பட்டு இனவொழிப்புக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஐக்கிய நாட்டு மனித உரிமை ஒருங்கினைப்பு அமைச்சின் தகவலின் அடிப்படையில், ஏறத்தாழ 1,40,000 ரோஹிங்கிய இசுலாமியர்கள் குடும்பங்கள் சிதறுண்டு அகதிகள் முகாம்களில் பர்மாவில் அதி முக்கிய உதவிகளை எதிர் நோக்கி வாழ்கின்றனர். மேலும் பலர் தொலை தூரக் கிராமங்களில் பயணிக்க இயலாது முடக்கப்பட்டுள்ளனர்.

இந்த பர்மிய இசுலாமியர்களின் துன்புறுத்தல்களுக்கான காரணங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வின் அடிப்படையைக் கொண்டதாகும். மனித உரிமைக் கழகம் அதை ஆய்கிற பொழுது, இரண்டாம் உலகப் போரின் பொழுது பர்மா பிரிட்டிஷ் அரசாட்சியின் கீழ் இருந்தது.
அச்சமயத்தில், 1941ல் பர்மாவினுள் ஜப்பானியர்கள் நுழைந்தனர். ஆனால், ரோஹிங்கிய இசுலாமியர்கள் தங்களின் விசுவாசத்தை பிரித்தானியர்களுக்குக் காட்டினர். அப்பொழுது தான் இசுலாமியர்களுக்கும் இசுலாமியர் அல்லாதோருக்குமான கலகம் வெடிக்க ஆரம்பித்தது.
பர்மாவின் 90 சதவீத மக்கள் பௌத்தர்கள், இசுலாமிய சிறுபான்மையினரை ஆளுகிற அரசு குறி வைத்து தாக்குகிறது.
1978 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில், தனியாக இரானுவ முகாம்களிட்டு 4,50,000 ரோஹிங்க்கிய இசுலாமியர்களை வலுக் கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றியதோடு மட்டுமல்லாது கொலை செய்தனர் மற்றும் தீக்கிரையாக்கினர். அப்படி வெளியோர்களில் கூட்டமாக கலவரம் நடந்து கொண்டிருந்த வடக்கு ரோஹிங்கியாவிலேயே நுழைந்தனர்.
பர்மிய அரசு அந்த அனாதையாக்கப்பட்ட இசுலாமியர்களுக்கு பாதுகாப்பான இருப்பிடத்தைக் கொடுக்க முன் வரவில்லை. காரணம், அவர்கள் பூர்வீக பர்மியர்கள் அல்ல என்பதாகும்.
இருந்த போதிலும், ரோஹிங்கிய இசுலாமியர்கள் அவர்களின் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மூதாதையர்களின் மூலத்தை அடையாளம் காட்டினாலும், அரசு அவர்கள் வங்காள தேசத்திலிருந்து வந்தவர்கள். குடியுரிமை பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என நிராகரித்தது.
2012 கலவரத்திற்குப் பின்பும் பர்மிய ஜனாதிபதி தெய்ன் செய்ன், ரோஹிங்கிய இசுலாமியர்கள் பர்மாவிலிருந்து வேறு நாடுகளுக்கு விரட்டப்பட வேண்டும் என கூறினார்.

ரோஹிங்கிய இசுலாமியர்கள் எத்துனை பேர்கள் இது வரை கலவரத்தினால் கொல்லப் பட்டுள்ளனர் என்பது தெளிவில்லாத ஒன்றாக உள்ளது. ஆனால், சில தகவல்கள் கூறுகின்றன 2011 ஆம் ஆணிடில் மட்டும் 200 லிருந்து 300 ரோஹிங்கிய இசுலாமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று.
மேலதிகத் தகவலாக, சுமார் 1,40,000 இசுலாமியர்கள் அகதிகள் முகாம்களிலும்,2012லிருந்து 86,000க்கும் அதிகமானோர் படகுகள் மூலமாக வெளியேறி, தாய்லாந்து, மலேசிய மற்றும் இந்தோனேசிய நாடுகளுக்குக் குடியேற முயன்றுள்ளனர் என்றும் ஐக்கிய நாட்டு அகதிகள் கண்கானிப்பு அமைச்சு 2014 ஆம் ஆண்டில் கணக்கெடுத்துள்ளது.
இறைவழிபாடுக்கு முற்றிலும் தடை. சமய நெறிகளுக்கு எதிரான அவமானம். இதெல்லாம் பர்மிய முஸ்லிம்கள் அன்றாடம் பறிகொடுத்து வரும் மனித உரிமைகள். அவரவர்க்கு பிடித்த உணவு உண்ணவும் தடை. 2000 லிருந்து மியான்மரில் இறைச்சியை பயன்படுத்த தடை விதிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது. இறைச்சி சாப்பிட்டது ஊர்ஜிதமானால்.. அவர்கள் 5 ஆயிரம் கியாட் அதாவது 42 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தியாக வேண்டும். இறைச்சிக்காக அறுக்கப்பட்டது ஆடாக இருந்தால்.. அதை பயன்படுத்தியவருக்கு 10 ஆயிரம் கியாட்டிலிருந்து (84 ஆயிரம் ரூபாய்) .50 ஆயிரம் கியாட்வரை (4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படும். மாடாக இருந்தாலோ ஒரு லட்சம் கியாட் (8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்) அபராதமாக விதிக்கப்படும்.
மீனை உணவாக எடுத்துக் கொண்டாலும் அவருக்கும் இதே நிலைதான்; அபராதம்! மீன் பிடித்துக் கொண்டிருந்த முஸ்லிம்கள் பயங்கரவாத புத்த பிட்சுகளிடம் மாட்டிக் கொண்டு அந்த அரக்கர்களின் காலடியில் விழுந்த கதறி அழுது பாவமன்னிப்புப் பெற்ற சம்பவங்களும் ‘டேக் வெஹ் பு’ கிராமத்தில் நடந்துள்ளன.KHRG மனித உரிமை அமைப்பின் அறிக்கையில் இது பதிவாகியுள்ளது.
முஸ்லிம்கள் மீன்களை வேட்டையாடக் கூடாது. யாருக்கும் தெரியாமல் இரவு நேரங்களில் மீன் வேட்டையாடி சிக்கிக் கொண்டால்..அவர் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
அந்தத் தண்டனை அடி-உதையாக இருக்கலாம். புத்த பிட்சுவின் காலில் விழுந்து கதறி அழுது பாவமன்னிப்பு கேட்பதாகவும் இருக்கலாம். இத்தனையும் நடந்தும் கூட மீன்பிடித்தல் குற்றத்துக்காக 5 ஆயிரம் கியாட் (42 ஆயிரம் ரூபாய்) அபராதம் செலுத்தியவர்களும் உண்டு.மீன் பிடித்த குற்றவாளி பணிந்து போகவில்லை என்ற ஒரே காரணத்துக்காக ஒருவருக்கு 30 ஆயிரம் கியாட் (2 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்ட சம்பவங்களும் உள்ளன. அப்படி அபராதம் செலுத்தாதவர்கள் மரண தண்டனை விதிக்கப்படும் உச்சக் கட்ட உத்திரவும் உண்டு. அகதிகள் முகாம்களில் தங்கியிருப்போரின் பதிவுகள் இவை.2000 லிருந்து மியான்மரில் இறைச்சி உண்ண தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகமே தலையில் வைத்துக் கொண்டாடிய ஜனநாயகப் போராளி, பர்மிய அரசியல் நாயகி, ஆங் சென் சுகி தனக்கு நோபல் பரிசு அளிக்க நார்வேயில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, அவர் அடக்கி ஒடுக்கப்படும் பர்மிய முஸ்லிம்களைப் பற்றி ஒரே ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பர்மாவில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் சம்பந்தமாக மூச்சுகூட விடவில்லை. ஜனநாயகப் போராளிகளுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்த சம்பவம் இது.

மனசாட்சி மிக்க உலக மக்கள் இன வெறியால் படுகொலைச் செய்யப்படும் பர்மிய முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும். இது அவர்களின் தார்மீகக் கடமையும்கூட. பெயர்தாங்கிகளாக சர்வதேச சமூகம் வாய்மூடி மௌனமாக உள்ள நிலையில் பர்மிய முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்குக் குரல் எழுப்ப வேண்டியது நம் அனைவர் மீதும் கட்டாயக் கடமையாகும்.

அபூஷேக் முஹம்மத்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-