அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பல்வேறு நவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் “சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை“ அளிக்க தமிழக அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கூட்டம் அந்த மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில் நேற்று நடந்தது. அப்போது தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி டீன் ரெங்கநாதன், மருத்துவ கண்காணிப்பாளர் நீலகண்டன் மற்றும் டாக்டர்கள் கிருஷ்ணசாமி கண்ணன், அருண்குமார், ராஜேஷ் உள்ளிட்டோர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி பெறப்பட்டது குறித்து பத்திரிகையாளர்களிடம் விளக்கி கூறினர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

பெரம்பலூர் மற்றும் அரியலூர் உள்பட அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் சிறுநீரக நோயினால் அவதிப்படுகின்றனர். இதில் சிறுநீரக கற்கள், சிறுநீரக தொற்று மற்றும் சிறுநீரக செயலிழப்பு அதிகமாக இருக்கிறது. டயாலிசிஸ் சிகிச்சை முறை என்பது சிறுநீரக செயல் இழப்பிற்கான ஒரு தற்காலிக சிகிச்சை முறையே ஆகும். இதற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையே முழுமையான தீர்வாகும்.மருத்துவ காப்பீட்டு திட்டங்களின் மூலமும்...

பெரம்பலூரை சுற்றியுள்ள மாவட்டங்களில் தனலட்சுமி மருத்துவமனைக்கு மட்டுமே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். தமிழக முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் மற்றும் இதர மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் மூலமும் இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அரசு விதிகளின்படி இங்கு அளிக்கப்பட உள்ளது. எனவே இந்த மருத்துவ சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் குழுவினர் தெரிவித்தனர்.

தனலட்சுமி சீனிவாசன் குழுமங்களின் நிறுவன தலைவர் சீனிவாசன் கூறுகையில், அரசு அனுமதி பெறப்பட்டுள்ளதால் வெளி இடங்களில் இல்லாத வகையில் குறைந்த செலவில் தனலட்சுமி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தலைசிறந்த டாக்டர்கள் மூலம் அளிக்கப்பட உள்ளது. இதன் மூலம் 30–32 ஆண்டுகள் வரை சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உயிர்வாழமுடியும். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-