அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 
பொதுமக்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்மிலேயே பணம் எடுத்தால் பாதுகாப்பானதாக இருக்கும் என வங்கிகள்அறிவுறுத்தியுள்ளன. வேலைக்கு செல்வோர், கல்லூரியில் படிப்பவர்கள், மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தற்போது வங்கி கணக்கு வைத்திருக்கின்றனர். இவர்களில் 90 சதவீதம் பேர் பணபரிமாற்றத்துக்காக வங்கிக்கு செல்வது கிடையாது. ஏடிஎம் கார்டு மூலமாக தேவைப்படும்போது பணத்தை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். தெருவிற்கு ஒன்று என ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் எந்த இடத்தில் எந்த வங்கியின் ஏடிஎம் மையம் இருந்தாலும் நாம் யோசிக்காமல் பணத்தை எடுப்பது வாடிக்கையாக உள்ளது. பிற வங்கி ஏடிஎம்மில் குறிப்பிட்ட முறை பணம் எடுத்தால் சேவை கட்டணம் கிடையாது என்பதால் வங்கி கணக்கு அல்லாத வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்கு யாரும் தயங்குவது கிடையாது.

இந்நிலையில் வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏடிஎம்மை பயன்படுத்தினால் பாதுகாப்பாக இருக்கும் என ஸ்டேட் வங்கி எச்சரித்துள்ளது. வங்கி கணக்கு ரகசியங்களை பாதுகாக்கவும், தவறான முறையில் நமது வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது போன்றவற்றில் இருந்து தவிர்ப்பதற்கு கணக்கு வைத்துள்ள வங்கி ஏடிஎம்மை பயன்படுத்த வேண்டும் என வங்கி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தவறான நோக்கத்தோடு பாதுகாப்பு அம்சங்கள் மீறப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக ஸ்டேட் வங்கிதெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் 700 கோடி ரூபாய் சில்லறை கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு சி்ல்லறை கடனாக ஆயிரம் கோடி ரூபாய் வழங்க ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-