அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
தற்காப்புக் கலை என்றவுடனே நம் நினைவுக்கு வருவது கராத்தேதான். உஷு எனும் தற்காப்புக் கலை பற்றி இந்தியாவில் பலருக்கும் தெரியவில்லை. உஷு சீனாவின் தற்காப்புக் கலை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும் இந்தச் சூழலில் அவர்களுக்கு தற்காப்புக் கலை மிகவும் அவசியம்.

இதனை நன்றாக உணர்ந்த ஹைதராபாத், செயிண்ட் மாஜ் (St.Maaz) மேல்நிலைப் பள்ளி, கடந்த பத்து அண்டுகளாக 'உஷு' எனும் தற்காப்புக் கலையை மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இதுவே இந்தியாவின் முதல் பள்ளி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. இங்கு படிக்கும் முஸ்லிம் பெண்களுக்கு, பள்ளி வளாகத்திற்குள்ளேயே வாரம் ஒருமுறை பயிற்சி அளிக்கப்படுகிறது. 10 முதல் 16 வயதில் இருக்கும் பெண்கள் உஷு கலையை ஆர்வமுடன் கற்பது அனைவரையும் ஆச்சர்யபட வைக்கிறது.
இதே பள்ளியில் 9-ம் வகுப்புப் படிக்கும் ஃபரீஹா தாஃபிம், உஷு, சீனியர் மாணவிகளையும் தோற்கடித்து ஆசிரியர்களின் பாராட்டுகளை பெற்றுவருகிறார். பள்ளி மாணவிக்ளில் எல்லோரும் ஃபரீஹாவின் ரசிகார்களாகிவிட்டனர். இவருடைய திறமையைப் பார்த்த தலைமை ஆசிரியர், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான உஷு போட்டிகளில் பங்குபெற முயற்சிகளை மேற்கொண்டார்.

ஆனால், ஃபரீஹாவின் அம்மா, ஒரு முஸ்லிம் பெண் மற்றவர்களின் முன்னிலையில் போட்டியில் பங்குபெற முறையல்லவே எனத் தயங்கினார். ஃபரீஹாவின் அப்பா, மகளின் ஆர்வத்துக்குத் தடையாக இல்லாமல் சம்மதம் தெரிவித்தார். ஹைதராபாதில் நடைபெற்ற மாநில அளவிலான உஷு போட்டியில் தங்கம் வென்று, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றார். இந்தப் போட்டி அசாமில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அம்மா, ''ஹைதராபாதில் இருந்து அசாம் செல்ல ரயிலில் 60 மணி நேரம் பயணிக்கவேண்டுமே" என மீண்டும் செல்ல வேண்டாம் என மறுத்தார்.ஃப்ரீஹா தண்ணீர் கூட குடிக்காமல் போட்டியில் எப்படியாவது பங்குபெறவேண்டும் என்று அம்மாவிடம் அடம்பிடித்தார். மகளுக்குத் துணையாக அப்பா நின்றதால் ஃப்ரீஹா அசாம் பயணம் சாத்தியமானது. இந்த ஆண்டில் அசாம் தலைநகர் கெளகாத்தியில் நடைபெற்ற சாம்பியன் ஷிப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியோடு வீடு திரும்பினார் ஃபரீஹா.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-