அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்க ‘வாட்ஸ்–அப்‘ எண்ணை போலீஸ் அதிகாரிகள் வெளியிட்டனர். அந்த வாட்ஸ்–அப் எண்ணில் சரியான தகவலை பதிவு செய்து பயன்பெறுமாறு போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி


தமிழ்நாடு காவல்துறையின் இணையதள சேவைகளை பொதுமக்களுக்கு எடுத்து கூறும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திரா தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஞானசிவக்குமார் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியின்போது, குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைப்பின்னல் போலீஸ் பிரிவு சார்பில் tஸீஜீஷீறீவீநீமீ.ரீஷீஸ்.வீஸீ என்கிற தமிழ்நாடு காவல்துறை இணையதளம் வாயிலாக புகார் மனுவை பதிவு செய்தல், புகாரின் நிலை குறித்து அறிதல், முதல் தகவல் அறிக்கையின் நிலை, வாகனங்களின் நிலை, அடையாளம் காணப்படாத உடல்கள் உள்பட 8 வகையான சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்வது குறித்து திரையில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த சேவைகள் தொடர்பான விளக்கத்தினை குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைப்பின்னல் பிரிவு போலீஸ்காரர் அசோக்குமார் அளித்தார். மேலும் இந்த சேவைகளை ஒரு குறிப்பிட்ட செயலி மூலம் செல்போனில் பயன்படுத்துவது குறித்தும் எடுத்து கூறப்பட்டது. இந்த இணையதள சேவைகளை தாலுகா அலுவலகங்களில் உள்ள இ–சேவை மையங்களில் பெறலாம்.

வாட்ஸ்–அப் எண் வெளியீடு


அதன்பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் இணையதள சேவைகளை பயன்படுத்துவது குறித்து எழுந்த சந்தேகங்களை போலீசாரிடம் கேட்டனர். அப்போது அதற்கு போலீசார் பதில் கூறினர். அதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் உடனுக்குடன் புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக 8681000100 என்கிற ‘வாட்ஸ்–அப்‘ எண்ணை போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திரா மற்றும் போலீஸ் அதிகாரிகள் வெளியிட்டனர்.

அப்போது அந்த எண்ணை தங்களது செல்போனில் பொதுமக்கள் பதிவு செய்து கொண்டு தகவல் கொடுக்க ஆரம்பித்தனர். இந்த வாட்ஸ்–அப் எண்ணுக்கு வரும் தகவலை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இணையதளம் மூலம் போலீசார் தொடர்ந்து கண்காணிக்க உள்ளனர்.

சரியான தகவலை...


புகார் தெரிவிக்க ‘வாட்ஸ்–அப்‘ எண் வெளியிட்டது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சோனல்சந்திரா நிருபர்களிடம் கூறுகையில், ‘வாட்ஸ்–அப்‘ எண்ணில் புகார் தெரிவிக்கும் நடைமுறையானது கோவை, திருச்சி உள்ளிட்ட போலீஸ் கமிஷனரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாவட்டங்களில் தற்போது இருக்கிறது. அந்த வகையில் நகராட்சி, பேரூராட்சிகளை உள்ளடக்கி போலீஸ் சூப்பிரண்டின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் மாவட்டங்களில் பெரம்பலூரில் தான் முதல் முறையாக புகார் தெரிவிக்க வாட்ஸ்–அப் எண் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் வழக்கமான தகவலை பதிவிடாமல் புகார் தொடர்பான சரியான தகவல்களை பொதுமக்கள் பதிவிட வேண்டும். இந்த புகார்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு குற்றங்களை தடுக்க போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்


இந்த நிகழ்ச்சியில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திக், ஜவகர்லால், குமரவேலு, மோகன்தம்பிராஜன், வெற்றிவேலன், போலீசார், பெரம்பலூர் மாவட்ட கார்–ஆட்டோ டிரைவர்கள், மாணவ–மாணவிகள், ஆசிரியர்கள், வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-