அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
: துபாய், அக்-28
எதிர்கால போக்குவரத்து சாதனமாக கணக்கிடப்படும் ஹைப்பர்லூப் ஒன் திட்டத்தின் மூலம் ஏற்கனவே துபை ஃபுஜைரா இடையேயான போக்குவரத்திற்கு ஆரம்பகட்ட பணிகள் துவங்கியுள்ள நிலையில் அடுத்ததாக துபை அபுதாபி இடையேயான ஹைப்பர்லூப் ஒன் திட்டத்திற்கான ஆய்வுத்திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதன் அதிகாரபூர்வ பூர்வாங்கப்பணிகள் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் தேதி துவங்கவுள்ளது.

துபையிலிருந்து 150 கி.மீ. தூரத்திலுள்ள அபுதாபியை சென்றடையும் சுமார் 15 நிமிடங்களில் சென்றடையலாம். துபை விமான நிலையம், மக்தூம் விமான நிலையம் மற்றும் அபுதாபி விமான நிலையங்கள் வழியாக செல்லும் மேலும் ஜெபல் அலி போர்ட், கலீஃபா போர்ட் ஆகியவற்றையும் இணைக்கும் வகையில் இதன் அரை வெற்றிடக்குழாய் பாதைகள் (Semi-Vacuumed Tube) அமையவுள்ளன.

Source: Gulf News
தமிழில்: 
அதிரை நியுஸ்நம்ம ஊரான்
0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-