அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

500 மற்றும் 1000 ரூபாய்களில் அதிகமான கள்ளநோட்டுக்கள் புழங்குவதையடுத்து, மக்கள் பண்டிகை நேரங்களில் கவனமாக பார்த்து வாங்க வேண்டும் என ரிசர்வ்வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

500 மற்றும் ஆயிரம் ரூபாய்களில் அதிகமான கள்ளநோட்டுக்கள் இந்த பண்டிகை காலத்தில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நேரத்தை சாதகமாகப் பயன்படுத்தி, சிலர் போலி ரூபாய் நோட்டுகளை மக்களிடம் புழக்கத்தில் விட்டு மோசடி செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே இது தொடர்பாக பலமுறை பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை செய்து, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்கும்போது கவனமாகச் செயல்படவேண்டும் என எச்சரித்து இருந்தது. அதேபோல இந்தமுறையும் மீண்டும் எச்சரிக்கிறது.

ரிசர்வ் வங்கியால் அதிகமான பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடப்படும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இருக்கும். ஆனால், போலியான ரூபாய் நோட்டுக்களில் அந்த அம்சங்கள் இருக்காது. அந்த பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மக்கள் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

ஆதலால், பொதுமக்கள் தங்கள் பரிமாற்றத்தின்போது, ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை கவனமாக பரிசீலித்து வாங்க வேண்டும் என எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-