அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
உலகில் இணையதளம் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாகவே மாறிவிட்டது. இதனால் மொபைல் நெட்வொர்க் கம்பெனிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி நிலவி வந்தன. ஆனால், தற்போது டீக்கடையிலும் நம்மவர்கள் இண்டர்நெட் ஆஃபர்களை வழங்க ஆரம்பித்து விட்டார்கள். கர்நாடகாவில் சிறுகுப்பா என்ற நகரில் 23 வயதான சையது காதர் பாஷா என்பவருக்கு சொந்தமான டீக்கடையில் 5 ரூபாய்க்கு டீக்குடித்தால் 30 நிமிடங்களுக்கு இண்டர்நெட் இலவசமாக வழங்குகிறார்.


அதன்படி, இவரது கடைக்கு வருபவர்களுக்கு வாங்கும் பொருட்களுடன் வைஃபை பாஸ்வேர்டு கூப்பனும் வழங்கப்படுகிறதாம். ஆனால் ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே கடையில் இண்டர்நெட்டை பயன்படுத்த முடியும். இதனால் இவரது லாபம் தற்போது ஜெட் வேகத்தில் முன்னேறியுள்ளதாம். முன் ஒரு நாளுக்கு தினசரி 100 கப் டீ விற்பனையாகி வந்தது.

தற்போது ஒரு நாளுக்கு 500 கப் டீ விற்பனையாகி வருகிறது. சரியாக அரை மணி நேரத்துக்கு பிறகு நமது மொபைலில் இண்டர்நெட் ஆட்டோமெடிக்காக ஆஃப்பாகி விடுகிறதாம். முக்கியமாக தற்போது அங்கு இளைஞர்கள் மத்தியில் சையது பாயின் டீக்கடைதான் செம வைரல்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-