அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...






பெரம்பலூரில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல்–கணித கண்காட்சி நடைபெற்றது. இதில் 120 அரங்குகள் இடம் பெற்றிருந்தன.

அறிவியல், கணித கண்காட்சி

பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஆண்டுதோறும் மாணவ–மாணவிகளின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் மாவட்டந்தோறும் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஜவகர்லால் நேரு மாவட்ட அளவிலான அறிவியல்–கணித–சுற்றுப்புற கண்காட்சி அறிவியல் விழா, பாரத ரத்னா அப்துல் கலாம் பிறந்த தினவிழா, இளைஞர் எழுச்சி நாள் விழாவாக நேற்று நடைபெற்றது.

காற்றாலை மின்உற்பத்தி

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களின் காற்றாலை மின்உற்பத்தி, சூரியஒளி கலன்கள் அமைத்து ஆற்றல் சேமித்தல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, யானைகள் காட்டிற்குள் புகுந்து பயிர்கள் சேதத்தை தடுக்க கம்பி வேலியில் தேனீ கூண்டுகள் அமைத்து பாதுகாத்தல், டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களை தடுத்தல், இயற்கை சூழலை பாதுகாக்கும் வழிமுறைகள், உடலியல் கூறுகள், இயற்பியல், வேதியியல் மாற்றங்கள் குறித்த அறிவியல் படைப்பு, ஆசிரியர்களின் அறிவியல் படைப்பு, மாணவர்களின் கணித படைப்புகள் என மொத்தம் 120 படைப்புகள் இடம்பெற்றிருந்தன.

இதில் முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடாசலம், பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். சிறந்த அறிவியல் படைப்புகளை வடிவமைத்த 21 படைப்புகள் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-