அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது... 
பெரம்பலூர் நகரில் வியாபாரிகளை மிரட்டி, தீபாவளி வசூலில் ஈடுபட்ட திருச்சி வருமான வரித்துறை ஊழியர்கள் 2 பேரை பெரம்பலூர் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள உணவகத்துக்கு வெள்ளிக்கிழமை நண்பகல் 1.30 மணிக்கு காரில் வந்த 2 பேர், தாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் எனக் கூறி, தங்களை அறிமுகம் செய்து கொண்டு தீபாவளிக்கு "இனாம்' தருமாறு கேட்டனராம்.
இதனால், இவர்கள் மீது சந்தேகமடைந்த அந்த உணவக ஊழியர்கள், பெரம்பலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், அந்த 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர்.
இதில், அவர்கள் திருச்சி வருமான வரி அலுவலக உதவியாளர்களான குழந்தை ஏசு (45), முருகேசன் (43) என்பதும், இவர்கள் இருவரும் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு, கடந்த ஒருவார காலமாக பெரம்பலூர் நகரில் உள்ள பல்வேறு கடைகளில் வருமான வரித் துறை அலுவலர்கள் எனக்கூறி மிரட்டி தீபாவளி வசூலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-