அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


 பெரம்பலூரில் அனுமதியின்றி வைத்திருந்த ரூ.25 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சோதனை


தீபாவளி பண்டிகையையொட்டி, பெரம்பலூர் கடைவீதியில் ஒரு கட்டிடத்தில் முறையான அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் நந்தகுமார் உத்தரவின் பேரில், வருவாய் கோட்டாட்சியர் பேபி தலைமையில் தாசில்தார் பாலகிருஷணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், தீயணைப்பு மற்றும் மீட்பு அலுவலர் மதியழகன், நிலைய அலுவலர் சதாசிவம் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கொண்ட குழுவினர் நேற்று மாலை அந்த கட்டிடத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது வைத்தீஸ்வரன் என்பவர் உரிய அனுமதி பெறாமல், தனது சகோதரர் பெயரில் பட்டாசுகளை கொள்முதல் செய்து 3 அறைகளில் பண்டல், பண்டலாக அடுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த ரூ.15 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த 3 அறைகளும் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தங்களது பாதுகாப்பு, கண்காணிப்பில் வைத்திருக்குமாறு கூறி வருவாய்த்துறையினர் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வருவாய்த்துறையினரும், போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடையில்...


இதேபோல், பெரம்பலூரில் உள்ள பிரசன்ன வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான ஒரு கடையில் நேற்று இரவு வருவாய், தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-