அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

259 ரூபாய் கட்டணத்தில் 10 ஜிபி டேட்டா வழங்குவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.


மும்பை:

ஜியோ வருகையால் தனது வாடிக்கையாளர்களை தக்க வைக்க நாள்தோறும் புதிய திட்டங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் நேற்று ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதாவது, புதிதாக 4 ஜி மொபைல் வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு 259 ரூபாய் கட்டணத்தில் 10 ஜிபி டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

4ஜி மொபைல் வைத்திருப்பவர்கள் 259 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் அவர்கள் அக்கவுண்டில் 1 ஜிபி கிரெடிட் ஆகும். மீதமுள்ள 9 ஜிபியை மை ஏர்டெல் ஆப் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

இந்த டேட்டா 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். ஏர்டெல் இந்த சேவையை மூன்று மாதங்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதுநாள்வரை குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மட்டும் வழங்கி வந்த இந்த சேவையை தற்போது நாடு முழுவதும் ஏர்டெல் நிறுவனம் வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-