துபாய், அக்-18
அமீரகத்தில் தற்போது மருத்துவ சிகிச்சைகளுக்காக தனித்தனி இன்ஷூரன்ஸ் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. துபையில் வசிக்கும் சுமார் 3.4 மில்லியன் மக்கள் இன்ஷூரன்ஸ் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
எதிர்வரும் 2017 முதல் காலண்டிற்குள் இனி தனியாக இன்ஷூரன்ஸ் கார்டுகளை பயன்படுத்த தேவையில்லை மாறாக தற்போது நடைமுறையில் இருக்கும் எமிரேட்ஸ் ஐடிகளை பயன்படுத்தியே மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் விரும்பினால் தனியாகவும் தற்போதுள்ளது போல் இன்ஷூரன்ஸ் கார்டுகளை வழங்கிக் கொள்ளலாம் என்றாலும் அவை கட்டாயமல்ல, எமிரேட்ஸ் ஐடிகள் மட்டுமே போதுமானது என்றும் துபை சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் துபையில் 100 சதவிகிதம் அனைவருக்கும் இன்ஷூரன்ஸ் எனும் திட்டம் முழுமை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Gulf News
தமிழில்: அதிரை நியூஸ்:
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.