அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

பெரம்பலூர், அக்.26:
தீபாவளியையொட்டி ஸ்வீட்ஸ் தயாரிப்பு, விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டன.
பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் அடிக்கடி சோதனை நடத்தி தர மற்ற, காலாவதியான தயாரிப்பு, காலாவதியாகும் தேதிகள், முகவரிகள் அச்சிடப்படாத உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர். மேலும் தடை செய்யப்பட்ட பான் பராக், புகையிலைப் பொருட்கள், ரசாயனக் குளிர் பானங்கள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதோடு, தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வருகிற 29ம்தேதி தீபாவளிப் பண்டிகை கொண் டா டப் ப ட வுள்ள நிலை யில் அதற் கான இனிப்பு, கார வகை களை பல் வேறு ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ், பேக் கரி நிறு வ னங் கள் பெரு ம ளவு தயா ரித்து, விற் பனை செய்து வரு கின் ற னர். இதில் தர மற்ற, உட லுக்கு கேடு விளை விக் கக் கூ டிய ரசா ய னப் பொருட் களை கலந்தோ, கவர்ச் சிக் காக தடை செய் யப் பட்ட வண் ணக் கல வை களை இனிப் பு க ளில் சேர்த்தே தயா ரிப் ப தும், விற் ப தும் சட் டப் படி தவ றான செய லா கும்.
இந் நி லை யில் நேற்று பெரம் ப லூர் நக ரி லுள்ள ஸ்வீட்ஸ் அண்டு ஸ்நாக்ஸ், பேக் கரி நிறு வ னங் க ளின் தயா ரிப்பு மற் றும் விற் ப னை களை உண வுப் பாது காப் புத் துறை யின் பெரம்பலூர் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் வெங்கடேசன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் பெரம்பலூர் சின்ன முத்து (நகர்ப் புறம்), லட்சு மண பெருமாள் (ஊரகம்), வேப்பூர் அழகு வேல், வேப்பந்தட்டை ரத்தினம், ஆலத்தூர் ரவி ஆகியோர் கொண்ட குழு வி னர் 20 இடங் க ளில் அதி டி ராக சோத னை கள் நடத் தி னர்.
அதில் தர மற்ற உண வுப் பொ ருட் கள், உற் பத்தி செய் யப் ப டும் தேதி, காலா வதி யாகும் தேதி குறிப் பி டப் ப டாத, தயா ரிப்பு முக வ ரி யற்ற, கவர்ச் சிக் காக தடை செய் யப் பட்ட ரசா யன வண் ணம் சேர்க் கப் பட்ட இனிப்பு மற் றும் கார வகை கள் ரூ.20 ஆயி ரம் மதிப் பி லான பொருட் கள் பறி மு தல் செய் யப் பட் டன. பின் னர் இது கு றித்து உண வுப் பாது காப் புத் துறை யின் மாவட்ட நிய மன அலு வ லர் வெங் க டே சன் தெரி வித் த தா வது : உண வுப் பொருட் க ளான இனிப்பு, கார வகை க ளைத் தயா ரிக் கப் பயன் ப டுத் தப் ப டும் எண் ணெய் வகை கள் ஏற் க னவே உப யோ கப் ப டுத் தப் பட் ட வை க ளாக இருக் கக் கூடாது. ஒரு முறை உப யோ கித்த எண் ணையை மறு உப யோ கத் திற் குப் பயன் ப டுத் தா மல் சுத் த மான, தர மான உண வுப் பொருட் க ளைத் தயா ரித்து விற் பனை செய் ய வேண் டும். உண வுப் பொ ருள் தயா ரிப் புக் கூடங் க ளில் பணி பு ரி வோர் தலை முடி கொட் டா த ப டி யும், கைக ளால் அழுக் கு கள் சேரா த படி பாது காப்பு உறை அணிந் தி ருக்க வேண் டும்.
உண வுப் பொருட் க ளில் உற் பத்தி மற் றும் தயா ரிப் புத் தேதி கள், தயா ரிப்பு முக வரி ஆகி ய வற் றைக் குறிப் பிட் டி ருக்க வேண் டும். இவை யன்றி தயா ரிக் கப் ப டும் உண வுப் பொருட் கள் சோத னை யில் கண் ட றி யப் பட் டால் பறி மு தல் செய் யப் ப டு வ தோடு சட் டப் பூர்வ நட வ டிக் கை கள் மேற் கொள் ளப் ப டும் என வும் எச் ச ரித் துள் ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-