அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சவுதி அரேபியாவுக்கு தொழிலுக்குச் சென்ற 16 இலங்கை பணிப்பெண்  எந்தவொரு தகவலும் காணப்படாதுள்ளதாகவும், இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்து அறிவிக்குமாறும் பணியகம் பொது மக்களின் உதவியைக் கோரியுள்ளது.

இவர்களைப் பற்றிய தகவல்கள் அறிந்தவர்கள் 011-4379328 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் பணியகம் கேட்டுள்ளது.
கடந்த 1993, 2004, 2008, 2009, 2011 ஆம் ஆண்டுகளில் இவர்கள் சவுதிக்கு தொழிலுக்காக சென்றுள்ளதாகவும் பணியகம் கூறியுள்ளது.

இவர்களைப் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லாதுள்ளதாக இவர்களது குடும்பத்தவர்கள் விடுத்துள்ள முறைப்பாட்டையடுத்தே பணியகம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
 நன்றி: http://www.newstig.com/

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-