அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
துபாய், அக்-16


அமீரகத்தில் தற்போது 18 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கே ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. தற்போது அந்த வயது வரம்பை 16 ஆக குறைக்க அமீரக போக்குவரத்து கவுன்சில் பரிசீலித்து வருகிறது, மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தவர்களைவிட இன்றைய இளைஞர்கள் சிறப்பான முறையில் வாகனம் ஓட்ட முடியும் என்பதால் அவர்களுக்கு உரிமம் வழங்க மறுப்பது நியாயமல்ல என மேஜர் ஜெனரல் முஹமது சைஃப் அல் ஜபீன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பல குடும்பங்கள் வெளிநாட்டு ஓட்டினர்களை நம்பியிருக்கும் நிலையில், 16, 17 வயது பூர்த்தியடைந்த இளைஞர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கினால் அவர்கள் தங்களின் குடும்பத்திற்கு தேவையான நேரத்தில் உதவுவதுடன் அவர்களை கூடுதல் பாதுகாப்புடனும் வாகனத்தில் அழைத்து செல்வார்கள் என்றும், அதிகமான விபத்துக்களை ஏற்படுத்துவதே சராசரியாக 24 வயது முதல் 35 வயதுடையவர்களே என்று ஆய்வுகள் தெரிவிப்பதாலும் 16 வயது இளைஞர்களுக்கு உரிமம் வழங்கலாம் என அமீரக போக்குவரத்து கவுன்சில் பரிசீலித்து வருகிறது.

Source: Emirates 247
தமிழில்: 
அதிரை நியூஸ் நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-