அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
துபாய் : உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் துபாய் 12 வது இடத்தில் உள்ளது. 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடத்தப்பட்டு வந்த இந்த சர்வே முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன.


சிறந்த நகரங்கள் ஆய்வு :உலகின் டாப் 23 நகரங்கள் குறித்து பிடபிள்யூசி கன்சல்டன்சி நிறுவனம், பிஏவி கன்சல்டன்சி என்ற நிறுவனத்துடன் இணைந்து 16 நாடுகளில் உள்ள 5200 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. பொருளாதார வலிமை, திடமான உள்கட்டமைப்பு, கண்டுபிடிப்புக்கள், செல்வாக்கு, சிறந்த பொழுதுபோக்கு, கலாச்சாரம், உணவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
12வது இடத்தில் துபாய் : உலகின் சிறந்த நகரங்கள் குறித்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் லண்டன் முதலிடம் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பாரீஸ், நியூயார்க் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே அரபு நகரம் துபாய் தான். ஆம்ஸ்டர்டாம் 4வது இடத்திலும், சிட்னி 5வது இடத்திலும் உள்ளன.

பொருளாதார அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் நியூயார்க் முதலிடத்திலும், பொழுதுபோக்கு அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் பாரீஸ் முதலிடத்திலும் உள்ளன.
பொருளாதாரம், பொழுதுபோக்கு ஆகிய இரண்டின் அடிப்படையிலும் நடத்தப்பட்ட ஆய்வில் நைஜீரியாவின் லாகோஸ் நகரம் கடைசி இடத்தில் உள்ளது. ஜகர்த்தா, மும்பை, போகோடா ஆகிய நகரங்களும் மோசமான நிலையிலேயே உள்ளன. உலக பொருளாதார கூட்டமைப்பில் ஐக்கிய அரபுகள் எமிரெட்ஸ் பிராந்திர அளவில் முதல் இடத்திலும், உலக அளவில் 16வது இடத்திலும் உள்ளது.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-