அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த அப்துல் அஜீஸ் அல் குரைர் மிகப்பெரும் கல்வி வள்ளலாவார்.
இவர் தற்போது 1.14 பில்லியன் ஏழை மாணவ மாணவிகளின் கல்விக்காக வாரி வழங்கியுள்ளார்.
இவருடைய முழு சொத்தின் மதிப்பு 3 பில்லியன் ஆகும்.
இவர் உலக பணக்காரர்களின் வரிசையில் முதல் 100 இடத்தில் கூட இவர் இல்லை, உலக பணக்காரர்களின் வரிசையில் 420 வது இடத்தில் இருக்கிறார்.
அப்படியிருந்தும் தம்முடைய பொருளாதாரத்தை முன்னேற்றி உலக பணக்காரர்களின் வரிசையில் முன்னிலையில் வருவதற்கு முயற்சிக்காமல் இறைவனின் பொருத்தத்தை மட்டும் நாடி தனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கான 1.14 பில்லியன் கல்விக்காக வாரி வழங்கியுள்ளார்.
உலகில் 1.14 பில்லியன் தொகை கல்விக்காக யாரும் கொடுத்ததில்லை, உலகின் மிகப்பெரும் கல்வி வள்ளலாக அப்துல் அஜீஸ் அல் குரைர் திகழ்கிறார்.
இதேப்போல் சவூதி அரேபியாவை சேர்ந்த இளவரசரான வலீத் பின் தலால் தனது சொத்தில் பெரும் பங்கை ஏழைகளின் வாழ்வாதாரத்திற்காக அள்ளி கொடுத்தார்.
முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் 2.5 சதவீதம் கட்டாயமாக தர்மம் செய்ய கட்டளையிட்டுள்ளது.
ஆனால் அப்துல் அஜீஸ் அல் குரைர், வலீத் பின் தலால் போன்றவர்கள் 2.5 சதவீத ஜக்காத் மட்டுமின்று பில்லியன் கணக்கில் சதக்காவை வாரி வாரி வழங்கியுள்ளார்கள்.
அல்லாஹ் இவர்களுக்கு மென்மேலும் நல்லருள் புரிந்து இவர்களின் பொருளாதாரத்தை பன்மடங்கு பெருக செய்வானாக...

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-