அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
நகரங்களில் கடுமையான லட்சியங்களுடன் நல்ல வேலை மற்றும் பணத்துடன் செலவு செய்யும் உயர் நடுத்தர வர்க்க மக்கள் பலர் உண்டு.   
சென்னை: உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் இந்தியாவும் ஒன்று. வருடா வருடம் லட்சம் கணக்கான மக்கள் வேலை தேடி நகரங்களுக்கு வருவதும் நிறைய பணத்தை செலவிடுவதும் வாடிக்கை. இதில் இருந்து நாம் இந்தியாவில் வாழ்வாதாரத்திற்கு அதிகம் செலவு ஆவதைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். தங்கும் இடம், உணவு, போக்குவரத்து, சுகாதாரம் போன்ற வற்றிற்கு எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதைப் பொருத்து நகரத்தில் வாழ்வதற்கான செலவு எவ்வளவு ஆகிறது என்று கணிக்க இயலும். இந்த நகரங்களில் கடுமையான லட்சியங்களுடன் நல்ல வேலை மற்றும் பணத்துடன் செலவு செய்யும் உயர் நடுத்தர வர்க்க மக்கள் பலர் உண்டு. எனவே நாம் இங்கு இந்தியாவில் டாப் 10 காஸ்ட்லி நகரங்கள் எவை என்று இங்குப் பார்ப்போம்.   

10. ஜெய்ப்பூர்  
இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள மிகப் பெரிய நகரம் ஜெய்ப்பூர். இந்தியாவின் பிரபல சுற்றுலாத் தளங்கள் உள்ள ஜெய்ப்பூரை பிங்க் சிட்டி என்றும் அழைக்கின்றனர். இரத்தினக்கற்கள், விலை உயர்ந்த துனி மணிகள், அரியக் கலை மற்றும் கைவினை பொருட்கள் போன்றவற்றை இந்த நகரத்தில் அதிகம் தயாரிக்கப்படுகிறது. பல விலையுயர்ந்த உணவகங்கள், தங்கும் விடுதிகள் போன்றவற்றிற்கு இந்தியா மட்டும் இல்லாமல் உலகளவில் பிரபலமான நகரம் ஜெய்ப்பூர் ஆகும். இங்கு ஒரு குடும்பம் வாழ மாதத்திற்கு 20,000 முதல் 67,000 ரூபாய் வரைத் தேவை என்று கூறப்படுகிறது.  

09. அகமதாபாத் 

குஜராத் மாநிலத்தின் மிகப் பெரிய நகரமான அகமதாபாத்தில் ஒரு குடும்பத்திற்கு மாதம் குறைந்தது 18,000 முதல் 63,000 வரைத் தேவைப்படும். இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள இந்த நகரத்தை இந்தியாவின் இதயம் என்று கூறுகின்றனர். பெருகி வரும் மக்கள் தொகை, ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி, வீடு, தொலைத்தொடர்பு, கட்டுமானம் போன்றவற்றில் அகமதாபாத் வேகமாக வளர்ந்து வரும் நகரமாகும். மேலும் இந்தியாவில் இரண்டாம் மிகப் பெரிய பருத்தி மற்றும் பொருத்தி ஆடைகள், பொருட்கள் உற்பத்தி செய்யும் நகரமாகவும் திகழ்கிறது.  


   08. ஹைதராபாத்  !

நிசாம்களின் கட்டிடக்கலை போன்றவை அதிகமாக உள்ள நகரம் ஹதராபாத். வரலாற்றில் முத்து போன்றவற்றிற்கு பேர் போன நகரமாக ஹைதராபத் திகழ்கிறது. இங்கு பெரும் அளவில் மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களும், பையோடெக்னாலஜி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மேலும் இங்கு உள்ளவர்களில் 90 சதவீதத்தினர் சேவைத் துறையில் பணியாற்றுபவர்களாக உள்ளனர். அது மட்டும் இல்லாமல் ஹைதராபாத் என்றால் உலகளவில் அதன் பிரியாணி மற்றும் ஹலீமின் வாசமும் வீசும். இங்கு வாழக் குடும்பத்திற்கு மாதம் 18,000 முதல் 65,000 வரை செலவு ஆகலாம்.  

   07. சண்டிகர்  

சுதந்திரம் பெற்ற பிறகும் இன்னும் பழமையான தோற்றத்தில் உள்ள இங்குச் சிறந்த கட்டுமானம், கலாச்சாரம், நவீனமயமாக்கல் போன்றவற்றில் சிறப்பாக சண்டிகர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் சுத்தமான நகரமாகவும், மக்கள் தொகை மற்றும் மகிழ்ச்சியான நகரமாகவும் இந்த நகரம் உள்ளது. காகிதம், உலோகங்கள், இயந்திரங்கள் மற்றும் மருந்து பொருட்கள் தயாரிக்கும் சிறந்த நிறுவனங்கள் இங்கு உள்ளன. சண்டிகரில் ஒரு குடும்பத்திற்கு மாதம் குறைந்தது 20,000 முதல் 70,000 வரை செலவாகும். 
   
 06. சென்னை  

வங்காள வரிகுடா கடற்கரையில் மைந்திருக்கும் நகரமான சென்னை தென் இந்தியாவின் பழைமை வாய்ந்த ஒரு நகரமாகும். இங்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் கொண்டாடக் கூடிய பல சுற்றுலாத் தளங்கள் உள்ளன. அது மட்டும் இல்லாமல் உலகின் மிகப் பெரிய கடற்கரையான மெரினா கடற்கரையும் இங்கு தான் உள்ளது. குற்றம் குறைந்த நகரங்களில் இந்தியாவில் மிகவும் பாதுகாப்பான நகரமாக உள்ள சென்னை தகவல் தொழில்நுட்பம், அவுட்சோர்சிங் போன்ற பிரிவில் சிறந்து விழுங்குகிறது. உற்பத்தி, சுகாதாரம், நிதித் துறை போன்ற கலப்பு பொருளாதாரமும் சென்னை விலங்குகிறது. சென்னையில் ஒரு குடும்பத்திற்கு குறைந்தது 20,000 முதல் 70,000 வரை மாத வருமானம் தேவைப்படுகிறது.   

05. கொல்கத்தா ! 

மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா இந்தியாவில் ஒரு முதன்மையான நகரம் என்று கூரலாம். நம் நாட்டில் செயல்பட்டு வரும் மெட்ரோ போன்ற திட்டங்கள் முதல் முதலாக இங்கு தான் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. கலாச்சாரம் முதல் அறிவியல் வரை அனைத்திலும் சிறந்து விலங்கும் நகரம் கொல்கத்தா என்றால் அது மிகை ஆகாது. கொல்கத்தாவில் ஒரு குடும்பத்திற்கு 20,000 முதல் 70,000 வரை மாத செலவு ஏற்படுகிறது.  

   04. பூனே 
 இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் உள்ள என்றால் அது பூனே என்று கூறலாம். நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கு பிடித்தமான இடமும் கூட. இங்கு ஐடி, ஆடோமொபைல், இஞ்சினியரிங் போன்ற துறைகள் பெறும் அளவில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு ஒரு குடும்பம் வாழச் சராசரியாக மாதத்திற்கு 20,100 முதல் 71,800 ரூபாய் வரை தேவைப்படுகிறது.  


03. பெங்களூரூ  
தென் இந்தியாவில் இருந்து இடம் பெற்று உள்ள மற்றோரு நகரம், இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படுகிறது. உலகின் பல்வேறு ஐடி நிறுவனங்கள் பெங்களுரில் தங்கலது கடையை விரித்துள்ளனர். மேலும் பல கல்வி நிறுவனங்கள், ஆய்வுக் கூடங்கள் மட்டும் இல்லாமல் இஸ்ரோ, எச்ஏஎல் போன்ற அரசு நிறுவனங்களும் இங்கு இருந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. வருடத்திற்கு 10.3 சதவீதம் வளர்ச்சி விகதம் உயர்ந்து வரும் பெங்களுரூவில் குடும்பத்திற்கு மாதம் 22,000 முதல் 80,000 வரை தேவைப்படுகிறது. 

   02. டெல்லி  

இந்தியாவின் தலைநகரான டெல்லி இந்தியாவில் உள்ள பிற மெட்ரோ நகரங்களை விட மிகப் பெரிய நகரம். பெரிய நகரம் மட்டும் இல்லாமல் பெரும் அளவில் தொழில் வளர்ச்சி உள்ள நகரமும் ஆகும். உலகளவில் பெரும் அளவில் காற்று மாசுபட்ட நகரம், மேலும் தொலைத்தொடர்பு மற்றும் ஐடி துறைகளுக்கான முக்கிய மையம், சிறந்த உணவகங்கள், தங்கும் விடுதிகள், தொழிற்துறை நிறுவனங்களுக்குப் பெயர் போன இடம் டெல்லி. இங்கு மாதத்திற்கு 22,750 ரூபாய் முதல் 75,000 வரை ஒரு குடும்பத்திற்கு மாதம் சராசரியாக செலவாகிறது. 


   01. மும்பை  

இந்தியாவின் நிதி நகரம் என்று அழைக்கப்படும் மும்பை பாலிவுட் காரர்களின் வீடு மட்டும் இல்லாமல் பெரும் தொழில் நிறுவனர்களான அம்பானி போன்றவரும் இங்கு தான் வசித்து வருகிறார்கள். இந்த நகரத்தின் வளர்ச்சியும் அதிகரித்துக் கொண்டே சென்று கொண்டு இருக்கிறது. இங்கு இந்த நிறுவனம் தான் என்று இல்லை அனைத்து வகையான துறைகளை சேர்ந்த நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. பிற நகரங்களுடன் ஒப்பிடும் போது இங்கு வேலைக்குச் செல்பவர்களின் நாள் சம்பளம் அதிகமாகவே உள்ளது என்று ஆய்வு கூறுகிறது.  

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-