அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானியை, இந்தியாவின் நம்பர்-1 பணக்காரர் என்று தொடர்ந்து 9வது வருடமாக, பிரபல பத்திரிகையான போர்ப்ஸ் தேர்ந்தெடுத்துள்ளது. அவரது வருமானம், வடக்கு ஐரோப்பிய நாடான, எஸ்டோனியா-வின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை (GDP) விட அதிகமாம்.

முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு 22.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என போர்ப்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


விப்ரோ நிறுவனத்தின் அஜிம் பிரேம்ஜிக்கு இப்பட்டியலில் நான்காவது இடம். அவரது நிகர மதிப்பு ரூ.15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இது ஆப்பிரிக்காவின், மொசாம்பிக் நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பான 14.7 பில்லியன் டாலர்களை விட அதிகம் என சுட்டிக்காட்டுகிறது போர்ப்ஸ்.

இந்தியாவின் 2வது பெரிய பணக்காரர், சன் ஃபார்மா நிறுவனத்தின், திலிப் சங்கவி. இவரது சொத்து மதிப்பு 16.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். ஹிண்டுஜா குழுமம் 15.2 பில்லியன் டாலர்களுடன், இப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. பல்லோன்ஜி மிஸ்திரி 13.90 பில்லியன் டாலர் மதிப்புடன் இப்பட்டியலில் 5வது இடத்திலுள்ளார் என போர்ப்ஸ் இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.


இந்தியாவின் முதல் ஐந்து பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 83.7 பில்லியன் டாலர்களாக உள்ளது. இந்த பண மதிப்பை வைத்து, செவ்வாய் ஆய்வுக்காக உருவாக்கப்பட்ட மங்கள்யான் போன்று 1230க்கும் மேற்பட்ட திட்டங்களை உருவாக்க முடியும். இவ்வாண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கிற்கான செலவைவிட இந்த ஐவரின் வருமானம் 18 மடங்குக்கும் மேல்.

இவ்வாண்டு இந்தியாவின் டாப்-100 பணக்காரர்கள் பட்டியலிலுள்ளவர்கள் சொத்து மதிப்பை கூட்டி பார்த்தால் 381 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு வருகிறது. இது கடந்த வருடத்தைவிட 10 விழுக்காடு அதிகம் என்கிறது போர்ப்ஸ்.

2014ம் ஆண்டு முதல் டாப்-100 பணக்காரர்களுமே பில்லினியர்களாகவே இருக்கிறார்கள். அதற்கு முன்பெல்லாம் இந்த பட்டியலில் மில்லினியர்களும் இருப்பர். பெரும், பணக்காரர்கள், செல்வந்தர்கள் எண்ணிக்கை, நாட்டில் அதிகரித்துவிட்டது, தொழில்துறை சிறப்பாக இயங்குகிறது என்பதையே இந்த புள்ளி விவரம் சுட்டுகிறது

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-