அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பேட்டரிகள் எளிதில் தீப்பிடிப்பதாக கூறி, அண்மையில் Samsung Galaxy Note 7 செல்பேசிகளுக்கு விமானத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவரின் Samsung Galaxy Note 2 செல்பேசி தீப்பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாம்சங் செல்பேசிகளின் பேட்டரிகள் தீப்பிடிக்கும் சம்பவம் வெவ்வேறு நாடுகளில் நிகழ்ந்திருப்பது அறிந்து, உலகம் முழுவதும் விமான நிறுவனங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டன.
இந்நிலையில், விமானத்தில் செல்பேசி தீப்பிடித்திருக்கும் சம்பவம் இந்தியாவில் இதுவே முதன்முறையாகும்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-