அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...மக்கா(14 செப் 2016): இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம் ஹஜ் தன்னார்வலர்களுக்குப் மக்கா அல் ஹயாவின் தலைவர் டாக்டர் ஜம்ஜாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


புனித ஹஜ் பயணம் மேற்கொண்டு ஹஜ் கடமையை செய்பவர்களுக்கு உதவும் விதமாக சுமார் 800 IFF தன்னார்வலர்கள் மக்காவில் முகாமிட்டு உதவி புரிந்து வருகின்றனர்.

ஹஜ் கடமை நடைபெறும் முக்கிய இடங்களான மினா, அரஃபா, முஸ்தலிபா ஆகிய பகுதிகளில் அங்கு இருக்கும் ஹஜ் யாத்ரீகர்களில், வயோதிகர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், இடம் மாறி வழிதெரியாமல் செல்பவர்கள் என பலருக்கும் இவர்கள் பல்வேறு உதவிகளை புரிந்தனர்.

இந்நிலையில் இவர்களின் சேவையை கண்டு மக்கா அல்ஹயாவின் தலைவர் டாக்டர் ஜம்ஜாமி தன்னார்வலர்கள் தங்கியிருக்கும் முகாமிற்கு சென்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது ஹஜ்ஜின் ஒவ்வொரு பகுதியிலும் IFF தன்னார்வலர்கள் செய்த சேவையைக் கண்டு நெகிழ்ந்து பாராட்டினார்.

இந்த சந்திப்பின்போது இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம் ஜித்தா பிரிவின் தெற்கு மாகான தலைவர் ஷம்சுதீன், ஹஜ் தன்னார்வ ஒருங்கிணைப்பாளர் முதஸ்ஸிர், மற்றும் அப்துல் ஜப்பார், உமர் ஹுசைன், முஹம்மது இக்பால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-