அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...


பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறயிருப்பதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுப்புகள் மற்றும் அரசின் அனைத்துத்துறைகளிலும் செயல்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள், சாதனைகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் ஆகியவற்றை மக்களிடையே எடுத்துச்செல்லும் பணியினைச் செய்தி மக்கள் தொடர்புத்துறை செய்து வருகிறது.

இத்துறையின் மூலம் அரசின் செய்தி வெளியீடுகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோப் பதிவுகள் ஆகியன மின்னஞ்சல் மூலமாக நாளிதழ்கள், தொலைகாட்சிகள், செய்திமுகமைகள், காலமுறை இதழ்கள் மற்றும் இணையதள செய்தி நிறுவனங்கள் போன்ற அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டு, அவற்றை செய்திதாள்கள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்பட்டு, பொதுமக்கள் அவற்றைத்தெரிந்து கொள்வதற்கு இத்துறை உறுதுணையாக இருந்து வருகின்றது. செய்தி மக்கள் தொடர்புத்துறையின் இணையதளமான www.in.dipv.gov.in மற்றும் அரசு இணையதளமான www.tn.gov..in ஆகிய இணையதளங்கள் வாயிலாகவும் அரசின் செய்திகள் மக்களைச் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன் தொடர்சியாக சமூக வலைதளங்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றின் வளர்ச்சியின் காரணமாக, அரசின் அனைத்து செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகளை நொடிப்பொழுதில் பொதுமக்களை சென்றடையும் வகையில் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பயன்படுத்திவரும் முகநூல் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்புகள் மற்றும் அரசின் திட்டங்கள் ஆகியவற்றை உடனுக்குடன் பதிவிட்டு வெளியிட இத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
https://m.facebook.com/profile.php?id=815603648539891 
 TN DIPR

முகநூலில் இத்துறையின் சார்பாக முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்புகள் மற்றும் அரசின் அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சாதனைகள் மற்றும் வளர்ச்சி பணிகள் ஆகியவற்றை மக்களிடையே எடுத்துச்செல்லும் பணியினை செய்தி மக்கள் தொடர்புத்துறை செய்து வருகின்றது.

எனவே பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் இச்சேவையை பயன்படுத்தி அத்திட்டஙகள் மூலமாக தங்கள் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக்கொள்ளலாம்.


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-