அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

 
சென்னை: பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் 10க்கும் ேமற்பட்ட இளம் பெண்களுக்கு காதல் வலை வீசி, அவர்களுடன் உல்லாசமாக இருந்ததாகவும், ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் பேராசிரியர் மகன் மீது மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிந்தாதிரிபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இளம்பெண் ஒருவர் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், மயிலாப்பூரை சேர்ந்த சாமுவேல் (24) என்பவர் என்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும், திருமணம் செய்துகொள்ள கேட்டபோது என்னுடைய ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்திருந்தார். இதுகுறித்து மகளிர் போலீசார் சாமுவேலை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல் வெளியானதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பேராசிரியர் மகனான இவர், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பல இளம்பெண்களிடம் முதலில் நட்பாக பழகி, பின்னர் அவர்களை உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறி, தனது வலையில் சிக்க வைத்துள்ளார். பின்னர் காதல் வலையில் சிக்கும் இளம் பெண்ணுடன் பல இடங்களில் சுற்றிதிரிந்து, அவர்களுடன் உல்லாசமாக இருக்கும்போது அந்த பெண்களுக்கு தெரியாமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.

இதுபோல் சாமுவேல் தனது காதல் வலையில் 10க்கும் மேற்பட்ட இளம் பெண்களை சிக்கவைத்து அவர்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருக்கமாக இருந்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் திருமணம் குறித்து கேட்டால், அவர்களிடம் ‘நீயும், நானும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ என்னிடம் உள்ளது. நான் சொல்வது போல் நீ நடந்து கொண்டால் இந்த புகைப்படங்களை நான் வெளியிடமாட்டேன்’ என்று மிரட்டியதும் தெரியவந்தது.

ஆனால் போலீசார் சாமுவேல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீஸ் அதிகாரி ஒருவர் இந்த வாலிபருக்கு ஆதரவாக ெநருக்கடி கொடுத்ததால் மகளிர் போலீசார் சாமுவேல் மீது வழக்கு கூட பதிவு செய்யவில்லை. மேலும், புகார் கொடுத்த இளம்பெண்ணின் பெற்றோரிடம் மகளிர் போலீசாரே சமாதானம் பேசி சாமுவேலுவை காப்பாற்றும் முயற்சியில் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாமுவேலுவால் பாதிக்கப்பட்ட இளம்பெண்களில் பலர் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-