அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...சவூதி அரேபியா, செப்.16
இந்த வருடம் புனித ஹஜ் கடமைகளை 164 சர்வதேச நாடுகளிலிருந்து வந்த ஹஜ் யாத்ரீகர்கள் மிகுந்த பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுக்கு மத்தியில் நிறைவேற்ற நேற்று புதன்கிழமையுடன் நிறைவடைந்தது.

ஹஜ் நிறைவை தொடர்ந்து இன்று மினா மத்திய கட்டுப்பாட்டு அறைக்கு விஜயம் செய்த பட்டத்து இளவரசர் முஹமது பின் நாயிஃப் அவர்கள் ஹஜ் பாதுகாப்பு பணியில் திறம்பட செயலாற்றிய அனைவருக்கும் நேரில் அரசின் சார்பாக நன்றி தெரிவித்தார்.

புதன்கிழமை காலை சூரிய உதயத்திற்குப் பின் துவங்கிய ஷைத்தானுக்கு கல்லெறியும் சம்பிரதாயத்திற்கு பின் நிறைவடைந்த இந்த வருட ஹஜ்ஜில் கடந்த காலங்களைப் போல் ஈரான் போன்ற நாடுகளால் ஏற்படுத்தப்படும் அரசியல்ரீதியான ஆர்ப்பாட்ட குறுக்கீடுகள் ஏதுமின்றி நிறைவுற்றதால் ஹஜ் யாத்ரீகர்கள் அனைவரும் அமைதியாக தங்களின் கடமைகளை நிறைவேற்ற முடிந்தது.

Source: Arab News
தமிழில்:
அதிரை நியூஸ்: நம்ம ஊரான்

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-