ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இஸ்லாமிய பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் தடுத்தனர்.
ஈரோடு:
ஈரோடு கள்ளுக்கடை மேடு ஜீவானந்தம் ரோடு ராஜாஜி வீதியை சேர்ந்தவர் சாதிக்பாட்சா. இவரது மனைவி ஆசியாபேகம் (வயது 45) ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்க ஆசியாபேகம் வந்திருந்தார்.
கலெக்டர் அலுவலகம் வந்த அந்த பெண் திடீரென தான் பாட்டிலில் கொண்டு வந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதை கண்டு திடுக்கிட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடிச்சென்று அந்த பெண்ணை தடுத்தனர். மண்எண்ணை பாட்டிலையும் பறிமுதல் செய்தனர்.
பிறகு அவர் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
நான் பலகார கடை நடத்தி வருகிறேன். எனது வீட்டை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் அபகரித்து அதில் ஒரு குடும்பத்தினரை வாடகைக்கு வைத்து உள்ளார்.
எனக்கு சொந்தமான அந்த வீட்டை மீட்டு என்னிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி உள்ளார்.
இந்த மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டார்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக
இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.