அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...பெரம்பலூர் மாவட்டம்,வி.களத்த்தூர்  அருகே பசும்பலூர் மாரியம்மன் கோயில் திருவிழாவில் தலித் தரப்பினர் பங்கேற்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, திருச்சி  மத்திய மண்டல ஐ.ஜி வரதராஜ், பாதுகாப்பு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

பசும்பலூர் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம் வரும் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில், தலித் தரப்பினரை பங்கேற்க அனுமதிப்பதோடு, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென, அந்த கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், கோயில் விழாவில் தலித்  தரப்பினரை பங்கேற்க அனுமதிக்க வேண்டும். அப்போது, சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க, அவர்களுக்கு ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிபதி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, வி.களத்தூர் காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்ற திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜ், கோயில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து, அதிகாரிகளுடன்

ஆலோசனை மேற்கொண்டார்.  

திருச்சி மத்திய மண்ட ஐ.ஜி.,வரதராஜ் வி.களத்தூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து பின்னர் போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து வி.களத்தூரில் நடைபெறும் ராயப்பா, செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) அனில்குமார் கிரி, மங்களமேடு கோட்ட துணை கண்காணிப்பாளர் ஜவஹர்லால், ஆய்வாளர் தங்கவேல் மற்றும் வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-