அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

புதுடெல்லி: நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. புதிய தொழில்நுட்பங்கள் வளர, வளர அதற்கெதிரான எதிர்வினைகளும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொருவரும் தங்களை பற்றிய முழுமையான தகவல்களை பகிரங்கமாக பதிவிடுவதால் மிக எளிதாக ஏமாற்றப்படுகிறார்கள். கல்லூரி படிப்பை முடித்து வெளியே வரும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பெரும்பாலும் ஆன்லைனில் தான் வேலை தேடுகின்றனர். ஆனால் வேலை வாய்ப்பு பற்றி ஆன்லைனில் உள்ள தகவல்கள் உண்மை தகவலா, மோசடி தகவலா என்பதை தெரிந்து கொள்வதில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. இதன்காரணமாக போலி வேலைவாய்ப்பை நம்பி பல லட்சங்களை கொடுத்து ஏமாறுகின்றனர். இதனால் மனதளவில் பாதிக்கப்படுவதோடு, விபரீத முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இதுபோன்ற ஆன்லைன் வேலைவாய்ப்பு மோசடிகளில் சிக்குபவர்களில் மூன்றில் ஒருவர் கடந்த ஆண்டு பட்டம் பெற்றவர்கள் மற்றும் இளைஞர்களே ஆவர். மொத்தத்தில் 17% புதிய பட்டதாரிகளே எச்சரிக்கையாக இருக்கின்றனர். உண்மையாக நிறைய வேலைவாய்ப்புகள் இருந்த போதிலும், பல போலி நிறுவனங்களும் இளைஞர்களை குறிவைத்து இயங்கி வருகின்றன. நேர்முகத்தேர்வுக்கு அழைக்கும்போது அதற்கான கட்டணம் என கூறி பல லட்சங்களை ஏமாற்றி விடுகின்றனர்.
இதேபோல் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறும் போலி நிறுவனங்கள், கிளியரன்ஸ் சான்றிதழ் வாங்கவேண்டும் உள்ளிட்ட பல காரணங்களை காட்டி காசு பார்த்து விடுகின்றன. இதனால் வேலை தேடுபவர்கள் பல ஆயிரம் கொடுத்து ஏமாறுகின்றனர். தற்போது சாப்ட்வேர் உட்பட பல துறைகளில் சுமார் 7 லட்சத்து 40 ஆயிரம் காலி பணியிடங்கள் காணப்படுகின்றன.

வேலை தேடுபவர்கள் போலியானவை எவை என்பது குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம். ஆன்லைனில் தேர்வு செய்யப்படும் நிறுவனங்கள் கட்டணம் குறித்து தெரிவித்தால் உஷாராகிவிடுவது அவசியமாகும். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பான ஆன்லைன் வேலை வாய்ப்பு குறித்து குறிப்பிடத்தக்க அளவில் ஆலோசனை மற்றும் வழிமுறைகளை கூறுவது இல்லை என 83% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பை தேர்வு செய்பவர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம் குறித்த முறையான தகவல்களை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். பணத்தைகொடுத்து ஏமாற கூடாது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
 

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-