அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

வாக்காளர் பட்டியல்

நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலகம், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நேற்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலை துறைமங்கலம் டி.இ.எல்.சி. பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் முரளி வெளியிட்டார்.

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட வாக்காளர் பட்டியல் துறைமங்கலம் டி.இ.எல்.சி நடுநிலைப்பள்ளி, அன்னை இவா மேரி கோக் மேல்நிலைப்பள்ளி, சங்குப்பேட்டை ஒன்றிய தொடக்கப்பள்ளி, ரோவர் மேல்நிலைப்பள்ளி, அன்னை பர்வதம்மாள் பள்ளி, ராமகிருஷணா மேல்நிலைப்பள்ளி, டோம்னிக் மேல்நிலைப்பள்ளி, கடைவீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, அரணாரை ஊராட்சி ஒன்றிய பள்ளி, பாத்திமா மேல்நிலைப்பள்ளி, மதரசா சாலையில் உள்ள மவுலானா மேல்நிலைப்பள்ளி ஆகிய 12 இடங்களிலும், நகராட்சி அலுவலகத்திலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும், ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும், அனைத்து பேரூராட்சி அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்று சரிபார்த்து கொள்ளலாம்.

மறுப்பு தெரிவிக்க விரும்புவோர்...

இந்த வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்ப்பதற்கான விண்ணப்பமோ, அல்லது பதியப்பட்டுள்ள ஒரு பெயருக்கோ அல்லது பட்டியலில் கண்ட விவரத்திற்கோ மறுப்புரை கூற விரும்புவோர் உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய குறிப்பிடப்படும் இறுதி நாள் வரை தங்களது கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளை சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் தெரிவிக்கலாம். கோரிக்கை மற்றும் மறுப்புரைகளின் மேல் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளை வாக்காளர் பதிவு அதிகாரியால் சேர்க்கவோ, நீக்கவோ, திருத்தவோ செய்யும் ஆணைகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் ஊரக மற்றும் நகர்புற வாக்கு பதிவு அலுவலர்களால் முறையாக மேற்கொள்ளப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-