அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. VKALATHUR.IN இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது...

சவூதி அரேபியா, செப்.08
புனித மக்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள புனிதத் தலங்களை சுற்றி காலாவதியான, கேடான உணவுகளை விற்கும் விற்பனையாளர்கள் மற்றும் உணவகங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளில் சவூதியின் வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான அமைச்சகம் இறங்கியுள்ளது.

விற்பனையாளர்களின் குடோன்களில் விநியோகத்திற்காக தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 140,000 உணவு வகைகள் மற்றும் 3000 குழந்தை உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. பிடிபடும் காலாவதியான உணவுகளுடன் அதன் முதலாளி, தொழிலாளர்கள் என அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரனைக்குப் பின் கடும் தண்டனைக்குள்ளாக்கப்படுவர்.

ஜீவல்லரி நிறுவனங்கள், விலையுயர்ந்த உலோக விற்பனை நிலையங்கள், கேஸ் ஸ்டேஷன்கள் (Petrol Bunk), ஆட்டோ ஓர்க் ஷாப்களிலும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு முறைகேடுகள் நடக்கிறதா என சோதனை செய்யப்படும்.

மேலும், மொபைல் போன் விற்பனையகங்கள், வணிக குளிர்ச்சாதன நிலையங்கள் (Cold Storage) மற்றும் உணவுகளை ஏற்றிச் செல்லும் டிரக்குகள் என எதுவும் சோதனையிலிருந்து தப்பாது எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Thanks :  அதிரை நியூஸ்:

0 கருத்துரைகள்:

கருத்துரையிடுக

இந்த வலைதளம் வளர்ச்சிக்கு நிறை-குறைகளை சுட்டி காட்டவும்.உங்கள் வருகைக்கு ரோம்ப நன்றி.

 
Top
-